சென்னையில் ஒரு சிறு ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் துவங்கி, இன்று உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கும் காக்னிசென்ட், தற்போது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு உலக நாடுகளில் பல நூறு வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது.
காக்னிசென்ட் நிறுவனத்தில் ஆரம்பம் முதல் இந்தியர்கள் மட்டுமே சிஇஓவாக இருந்த நிலையில், சில வருடத்திற்கு முன்பு ஒரு வெளிநாட்டவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்பு வர்த்தகத்தில் மந்த நிலையில், நிர்வாகத்தில் பிரச்சனை என தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில், முன்னாள் இன்போசிஸ் அதிகாரியான ரவி குமார்-ஐ சிஇஓ-வாக நியமித்தது காக்னிசென்ட் நிர்வாகம்.

ரவி குமார் பதவியேற்றிய நாளில் இருந்து அதிரடி தான், போட்டி நிறுவனங்களிலிருந்த மூத்த அதிகாரிகளை ஈர்த்தது முதல் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கும் முடிவு வரையில் மாஸ் காட்டி வருகிறார். இந்த நிலையில் ரவி குமார் சம்பளம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் காக்னிசென்ட் (CTS) நிறுவனம் தாக்கல் செய்த 2024 ஆம் ஆண்டிற்கான பிராக்ஸி அறிக்கையின்படி, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவி குமார் 2023 ஆம் நிதிய ஆண்டிற்கான சம்பளமாக 22.5 மில்லியன் டாலர் அதாவது 188 கோடி ரூபாய் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரியாக பணியாற்றிய ரவி குமார், கடந்த ஆண்டு ஜனவரியில் காக்னிசென்ட் (CTS)யில் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்று இன்று அதிகப்படியான சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் காக்னிசென்ட் (CTS) நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் நிலையான நாணய வருவாய் 0.3% சரிவைக் கண்டு 19.4 பில்லியன் டாலராக இருந்தது. இது ஐடி துறையை பாதிக்கும் வகையில் தொடரும் மந்தமான தேவையின் காரணமாக ஏற்பட்ட சிரிவு, ஆயினும் நிர்வாக மாற்றம், வர்த்தக சரிவு பாதையில் போட்டி நிறுவனங்கள் உடன் ஒப்பிடுகையில் டீசென்ட்டான செயல்பாட்டை ரவி குமார் காட்டியுள்ளார்.
மேலும் காக்னிசென்ட் (CTS) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கும், பணியாளர்களுக்கும் இடையேயான சம்பள வேறுபாடு கவலைக்குரிய விதமாக உள்ளது. இந்தியாவை மையமாகக் கொண்ட பணியாளர்களுடன் ரவிக் குமார் சம்பளத்தை ஒப்பிடும்போது, ஊதிய விகிதம் (median annual total compensation ratio) 1647:1 என்ற அதிர்ச்சியூட்டும் அளவில் உள்ளது.
இதுவே உலகளவில் உள்ள சராசரி பணியாளரின் ஆண்டு மொத்த ஊதிய விகிதம் 556:1 ஆகும். இந்தியாவில் சராசரி ஆண்டு ஊதியம் ₹10,90,000 ($13,735) ஆக இருக்கும்போது, உலகளவில் சராசரி ஆண்டு ஊதியம் $40,660 ஆக உள்ளது.
ரவி குமார்-க்கு முன்னதாக தலைமை செயல் அதிகாரியாக இருந்த பிரையன் ஹம்ப்ரிஸ், கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்ட நாள் வரையிலான அடிப்படை சம்பளத்தை உள்ளடக்கிய சுமார் $4.2 மில்லியன் (₹34 கோடி) சம்பளத்தை 2023 ஆம் ஆண்டில் பெற்றார்.
காக்னிசென்ட் (CTS) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற பிறகு அவருக்கு வழங்கப்பட்ட one-time awards மூலம் ரவி குமார் சம்பளம் தடாலடியாக உயர்ந்துள்ளது.
இந்திய ஐடி ஊழியர்களின் 2024 ஆம் நிதியாண்டுக்கான சம்பளம் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 2023ஆம் நிதியாண்டுக்கு இன்போசிஸ் சலில் பாரிக் 56.44 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்று இருந்தார். விப்ரோ முன்னாள் சிஇஓ தியரி டெலாபோர்ட் அப்போதைய காலகட்டத்தில் 82 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்று இருந்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications