செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை மனிதர்களின் வேலை வாய்ப்பை மிக வேகமாக பறித்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் ஏஐ மூலம் தங்களுடைய வேலைகளை தானியங்கு முறைக்கு மாற்றிவிட்டன. இதனால் அந்த வேலையில் இருந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கூகுள் அமேசான் உள்ளிட பெரிய நிறுவனங்களில் தொடங்கி சிறிய சிறிய ஸ்டார்ட் அப் கள் வரை ஏஐ மூலம் தன்னுடைய வேலைகளை எளிமையாக்கி வருகின்றன. வைட் காலர் வேலை மட்டுமில்லை , அமேசான் நிறுவனம் தங்களுடைய கிடங்குகளில் கூட ஊழியர்களுக்கு மாற்றாக ரோபோக்களை பணி நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இத்தகைய சூழலில் உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புத் துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை விரிவாக தெரிவித்து இருக்கிறார். இது தற்போது கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.
உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்டது தான் காக்னிசன்ட் நிறுவனம். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய ரவிக்குமார் ஏஐ பல்வேறு வேலைகளை ஆட்டோமேட் செய்து விட்டது ஆனால் அது நம் வேலை வாய்ப்பை பறிக்கவில்லை என கூறுகிறார். புதிய வகையான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது குறிப்பாக நுழைவு நிலை வேலைகளை அதிகப்படுத்த போகிறது என தெரிவித்திருக்கிறார்.
அதாவது ஒரு வேலையின் தொடக்கம் மனிதர்களிடம் இருக்கும் இடைப்பட்ட பகுதி ஏஐ இடம் இருக்கும் இறுதியாக அதனை சரிபார்த்து அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களிடம் இருக்கும் என கூறுகிறார் . தங்கள் நிறுவனம் ஸ்டெம் எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நபர்கள் மட்டும் என இல்லாமல் கலை மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிற பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளை அதிக அளவில் வேலைக்கு எடுக்கப் போகிறது என தெரிவித்திருக்கிறார் .
தங்கள் நிறுவனம் இதற்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை நாடி செல்ல இருக்கிறது என்றும் அவர் ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கிறார் .மனிதர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் ஏஐ தொழில்நுட்பம் என தெரிவித்திருக்கும் அவர் நம்முடைய செயல்திறனை மேம்படுத்துவதற்காக தான் ஏஐ பயன்படுத்துகிறோம் என விளக்கம் தந்திருக்கிறார்.
காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தி கொள்ள பயிற்சிகளை தருவதாக தெரிவித்துள்ள அவர், தற்போது பல்வேறு தொழில்நுட்ப வேலைகளை ஏஐ பார்த்துக்கொள்கிறது என்பதால் தங்கள் நிறுவனங்களில் தொழில்நுட்ப பிரிவுகளில் அல்லாத மாணவர்களை வேலைக்கு அமர்த்த முன்வந்திருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications