இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த முன்னணி நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது காக்னிசென்ட், சென்னையில் நிறுவப்பட்ட இந்நிறுவனம் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் தடுமாற்றத்திற்கு பின்பு ஐடி சேவை நிறுவனங்கள் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் ஐடி ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.
இந்த நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான Becky Schmitt தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் வருகிற மே 5 ஆம் தேதி Becky Schmitt நிறுவன பணியில் இருந்து முழுமையாக வெளியேறுகிறார். இந்த அறிவிப்பை காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான ரவி குமார் இந்நிறுவன ஊழியர்களுக்கு தெரிவித்தார்.

அக்சென்சர் 19000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், அதற்காக முதலில் பணிநீக்கம் செய்யப்படுபவர்களின் லிஸ்ட் தயாரிக்க துவங்கியுள்ள நிலையில் அடுத்தது எந்த நிறுவனம் பணிநீக்கத்தை அறிவிக்கும் என்ற அச்சத்துடன் ஐடி மற்றும் டெர் ஊழியர்கள் காத்திருந்த நிலையில் காக்னிசென்ட் Chief People Officer ஆக இருக்கும் Becky Schmitt தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் Becky Schmitt பதவியில் இடைக்கால CPO ஆக காக்னிசென்ட் ஹெச்ஆர் mergers and acquisitions பிரிவின் உயர் துணை தலைவர் Kathy Diaz நியமிக்கப்பட்டு உள்ளார். தற்போது ராஜினாமா செய்துள்ள Becky Schmitt வேறு நிறுவனத்தில் சேர உள்ளதாகவும், இவருடைய பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்க அமெரிக்க சந்தையில் மட்டும் அல்லாமல் உலகளவில் புதிய அதிகாரியை தேட உள்ளதாக ரவி குமார் தெரிவித்துள்ளார்.
காக்னிசென்ட் நிறுவனத்திற்கு சமீபத்தில் தான் புதிய சிஇஓ-வாக ரவி குமார் நியமிக்கப்பட்டார், இவர் நியமிக்கப்பட்ட நாளில் அதிரடியான முடிவுகளை எடுக்காவிட்டாலும் உயர்மட்ட நிர்வாகத்தை மேம்படுத்தவும், செலவுகளை குறைப்பதிலும் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறார். இது மட்டும் அல்லாமல் நிறுவனம் வேகமாக வளரவும், திறமையானவர்களை தக்க வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரவிகுமார்.

அக்டோபர் - டிசம்பர் 2022 காலாண்டில் காக்னிசென்ட் நிறுவனம் சுமார் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான வருமானத்தை ஈட்டியிருந்தாலும், தனது சக போட்டி நிறுவனங்களை ஒப்பிடுகையில் வித்தியாசம் மிகவும் அதிகம். இதை மாற்றுவதற்காகவே இன்போசிஸ் அதிகாரியான ரவி குமார் காக்னிசென்ட்-க்கு கொண்டு வந்து மிகவும் குறைந்த காலக்கட்டத்திலேயே சிஇஓ-வாக அறிவிக்கப்பட்டார்.
காக்னிசென்ட் Chief People Officer ஆக இருக்கும் Becky Schmitt தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களுக்கு பணிநீக்கம் இருக்காது. இல்லையெனில் தற்காலிக நிர்வாகத்தை வைத்து பணிநீக்கம் அறிவிக்கப்பட்டால் அடுத்த சில வாரத்தில் பணிநீக்க அறிவிப்புகள் வரலாம்.


Click it and Unblock the Notifications