இந்தியாவில் சுமார் 70 சதவீத ஊழியர்களை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் ஐடி சேவை அளிக்கும் அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் சமீபத்தில் பிரஷ்ஷர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம் வழங்குவதாக எழுந்த கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து இதற்கு ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
காக்னிசன்ட் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பில் 2024 ஆம் ஆண்டு பட்டம் பெறும் பட்டதாரிகளுக்கு வருடத்திற்கு ரூ.2.52 லட்சம் வரையிலான சம்பளம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இணையத்திலும், சமுக வலைத்தளத்திலும் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் காக்னிசென்ட் நிறுவனத்தைச் சுற்றி உருவாக்கியது.

இத்தகைய கடுமையான விமர்சனத்திற்கு முக்கியமான காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த அதே சம்பளத்தை இப்போதும் கொடுப்பது தான், இதோடு ஐடி சேவைத் துறை பொதுவாக 3 லட்சத்திற்கு அதிகமாகத் தான் சம்பளம் வழங்கப்படும், ஆனால் தற்போது 2.52 லட்சம் சம்பளம் என்பது பெரிய குறைப்பாக உள்ளது. இந்த நிலையில் தான் காக்னிசன்ட் இந்த பிரச்சனைகளுக்கும், கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் கொடுத்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவரும், அமெரிக்காஸ் பிரிவின் தலைவருமான சூர்யா கும்மாடி கூறுகையில், "சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம் ஊதியத்துடன் கூடிய இந்த வேலைவாய்ப்பு மூன்று ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே, பொறியியல் பட்டதாரிகளுக்கு அல்ல. ஆனால் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பெரிதும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.
மறுபுறம், பொறியியல் பட்டதாரிகளுக்கு எங்கள் நிறுவனத்தில் திறன் மற்றும் சர்டிபிகேஷன் பொறுத்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை தொடக்கச் சம்பளம் வழங்கப்படுகிறது. "பொறியியல் பட்டதாரிகளுக்கு நாங்கள் வழங்கும் சம்பளம் ஐடி சேவை பிரிவில் பிற ஐடி சேவை நிறுவனங்களுக்கு போட்டிதன்மை நிறைந்தது" என்றும் கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சம்பள உயர்வு: பிரஷ்ஷர்கள் சம்பளம் போலவே காக்னிசென்ட் ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் குறித்த விமர்சனங்களும் கடந்த வாரம் காக்னிசென்ட் சுற்றி எழுந்தது. இதற்கும் சூர்யா கும்மாடி விளக்கம் கொடுத்தார்.
காக்னிசன்ட், தனது ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு 1% மட்டுமே கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சம்பள உயர்வு தனிநபர் செயல்திறன் மற்றும் வர்த்தக போக்குகளை அடிப்படையில் இருக்கும் என தெளிவுபடுத்தினார். நிறுவனத்தில் குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு 1-5% வரம்பில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications