ஐடி இளைஞர்களுக்கு காக்னிசண்ட் கொடுத்த நல்ல செய்தி..! ஆனால் தள்ளிப் போகுதே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் பல தரப்பட்ட ஊழியர்களும், கம்பெனிகளில் இருந்து தாறுமாறக லே ஆஃப் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதில் பிரத்யேகமாக ஐடி கம்பெனிகளுக்கு தனி இடம் உண்டு. காரணம், இந்தியாவிலேயே லே ஆஃப் என்கிற வார்த்தையை அதிகம் பரிட்சயமாக்கியது நம் ஐடி தோழர்கள் தான்.

சரி காக்னிசண்டின் விஷயத்துக்கு வருவோம். அப்படி என்ன சொல்லிவிட்டார்கள்.

ஐடி கம்பெனிகள்

ஐடி கம்பெனிகள்

கொரோனா வைரஸ் லாக் டவுனால், ஐடி கம்பெனிகள், புதிதாக வேலைக்கு எடுப்பதில் தயக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் மிக முக்கிய ஐடி கம்பெனிகளாக இருக்கும் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், காக்னிசண்ட் போன்ற கம்பெனிகள், தேர்வு செய்த இலைஞர்களுக்கு, (ஜாப் ஆஃபர் கொடுத்தவர்களுக்கு) முறையாக சொன்ன படி வேலை கொடுப்போம் எனச் சொல்லி இளைஞர்கள் வயிற்றில் பாலை வார்த்து இருக்கிறார்கள்.

காக்னிசண்ட்

காக்னிசண்ட்

காக்னிசண்ட் நிறுவனம், சுமாராக 20,000 பேரை வேலைக்கு எடுத்துக் கொள்ள சம்மதித்து இருக்கிறது. ஆனால் கம்பெனியில் அவர்கள் வேலைக்குச் சேரும் தேதியை செப்டம்பருக்கு ஒத்திப் போட்டு இருக்கிறது. ஏன் இந்த ஒத்திவைப்பு..? எதற்காக..? என்றால் காக்னிசண்ட் கம்பெனி விளக்கம் கொடுத்து இருக்கிறது.

கொரோனா லாக் டவுன்

கொரோனா லாக் டவுன்

கொரோனா லாக் டவுன், பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல திறக்கப்படும் தேதிகளைப் பொறுத்து, தேர்வானவர்கள் காக்னிசண்ட் கம்பெனியில் வேலைக்குச் சேறும் தேதியும் மாறுபடும் என காக்னிசண்ட் கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரி பிரியன் ஹம்ப்ரிஸ் (Brian Humphries) சொல்லி இருக்கிறார்.

ஹயரிங் நிறுத்தம்

ஹயரிங் நிறுத்தம்

ஏற்கனவே, கொரோனா வைரஸால் உலகம் முழுக்க ஐடி துறை மந்தமாக இருக்கின்றன. எனவே காக்னிசண்ட் கம்பெனியில், ஒரு சில அத்தியாவசியத் துறைகளைத் தவிர, கணிசமான அளவில், புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைக்க இருக்கிறதாம்.

2 லட்சம்

2 லட்சம்

இந்தியாவில் டிசிஎஸ் கம்பெனிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 2 லட்சம் ஊழியர்களை வைத்திருக்கும் கம்பெனி காக்னிசண்ட் தான். அதோடு காக்னிசண்டில் மொத்த 2.9 லட்சம் ஊழியர்களில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியாவில் தான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

வருத்தம்

வருத்தம்

கேம்பஸ் இண்டர்வியூ எடுத்து தேர்வு செய்த கல்லூரி மாணவர்கள் சுமார் 20,000 பேரையும் நிச்சயம் வேலைக்கு எடுத்துக் கொள்ளவதாகச் சொல்லி இருக்கிறது காக்னிசண்ட். அந்த விஷயத்தில் ஐடி இளைஞர்களுக்கு ஜாலி தான். ஆனால்... என இழுத்து, இந்த வேலை வாய்ப்புகளை செப்டம்பர் வரை ஒத்திப்போட்டு இருப்பது, ஐடி இளைஞர்களுக்கு மத்தியில் சின்ன சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது காக்னிசண்ட்.

ஏன் இந்த வருத்தம்

ஏன் இந்த வருத்தம்

ஏற்கனவே திட்டமிட்டது போல, காக்னிசண்டில் முறையாக ஜூன் ஜூலை மாதங்களில் வேலைக்குச் சேர்ந்தால், இந்த இளைஞர்கள் சம்பளம் வாங்கத் தொடங்கிவிடுவார்கள். வேலைக்கான மன அழுத்தம் கணிசமாக குறைந்துவிடும். ஆனால், தற்போது தேர்வான இளைஞர்கள், இப்போது தங்கள் முதல் வேலை, எதிர்பார்த்தது போல கிடைக்குமா..? என்கிற ஏக்கம் கலந்த பயத்தில் காத்துக் கொண்டிருப்பார்கள் நம் இளைஞர்கள். இந்த மன அழுத்தமே அவர்களை ஒரு வழி செய்துவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant committed to honor job offers but deferring the joining date

The american IT giant cognizant technology committed to honor all their 20,000 above job offers. But now deferring the joining date for the job offers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X