சென்னையில் துவங்கி அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டாலும், இன்றளவும் காக்னிசன்ட் இந்தியாவில் தான் அதிகளவிலான ஊழியர்களை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது. காக்னிசென்ட் தனது ஊழியர்களுக்கு 2025-இன் இரண்டாம் பாதியில் சம்பள உயர்வை அறிவிக்கலாம் என இந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஜதின் தலால் தெரிவித்துள்ளார்.
இதோடு உலகளாவிய பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக, சம்பள உயர்வை எப்போது அளிக்கப்படும் என்பதை அறிவிப்பின் கால அட்டவணை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பொதுவாக ஆகஸ்ட் 1 முதல் தனது சம்பள உயர்வு காலத்தை தொடங்கும் இந்நிறுவனம், இம்முறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தாமதமாக அறிவிக்க உள்ளதாக அளித்துள்ளது.

எப்படி டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பெர்சிஸ்டென்ட் போன்ற நிறுவனங்கள் சம்பள உயர் ஒத்திவைத்தோ அதேபோல் காக்னிசென்ட் நிறுவனமும் தற்போது இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் டிசிஎஸ் போல் ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது ஐடி ஊழியர்களுக்கு சற்று நிம்மதியை அளிக்கிறது.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி வேறு ஐடி துறையை பாதிக்கும் வேளையில், ஒட்டுமொத்த சர்வதேச பொருளாதாரமும் அடுத்தடுத்து பாதிக்க உள்ளது. இதனால், நிறுவனங்கள் ஐடி சேவைகளுக்கான தங்களுடைய பட்ஜெட்டை தீர்மானிக்க முடியாமல் மாடிக்கொண்டு உள்ளனர். இதனால் மொத்த ஐடி துறையும் பாதிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காப்னிசன்ட் தனது ஊழியர் எண்ணிக்கையில் நிலையான வளர்ச்சியை கண்டு வருவதாக தனது காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 7,500 ஊழியர்களை சேர்த்துள்ளது. இந்நிறுவனம் ஜனவரி-டிசம்பர் நிதியாண்டை பின்பற்றுகிறது மற்றும் தற்போது 343,800 ஊழியர்களைக் கொண்டுள்ளது.
மேலும் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ ரவி குமார் கூறுகையில், இந்த காலாண்டில் தான் அதிகப்படியான ஊழியர்களை நாங்கள் பணியில் சேர்த்துள்ளோம். மேலும், 2025-ல் 15,000-20,000 பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications