ஐடி நிறுவனங்களின் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஏஐ தொழில்நுட்பமும், பணிநீக்கமும் ஏற்கனவே சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் நிறுவனங்கள் ஊழியர்கள் கம்ப்யூட்டரில் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க தொடங்கி இருப்பது தலைவலியை உண்டாக்கி இருக்கிறது.
தற்போது பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஹைபிரிட் வேலை முறையை வழங்குகின்றன. அதாவது பாதிநாள் வீட்டிலும் பாதில் நாள் அலுவலகத்திலும் வேலை செய்யக்கூடிய வாய்ப்பை தந்திருக்கின்றன. ஆனால் இவ்வாறு வீட்டில் இருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் உரிய நேரத்தில் வேலை செய்கிறார்களா ஏமாற்றுகிறார்களா என நிறுவனங்கள் கண்காணிக்க தொடங்கியுள்ளன.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படக்கூடிய காக்னிசன்ட்நிறுவனம் ஊழியர்களின் மவுஸ் மற்றும் கீபோர்டு இயக்கத்தை பயன்படுத்தி அவர்கள் எவ்வளவு நேரம் ஆக்டிவாக கணினி முன்பாக இருந்து வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க தொடங்கி இருக்கிறது. ProHance என்ற ஒரு கருவியையே இதற்காக உருவாக்கி இருக்கிறது.
இந்த கருவி ஒரு லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்யப்பட்டால் அந்த லேப்டாப் எவ்வளவு நேரம் ஆக்டிவாக இருக்கிறது குறிப்பிட்ட அந்த ஊழியர் எந்தெந்த செயலிகள் மற்றும் எந்தெந்த இணையதளங்கள் எல்லாம் ஓபன் செய்கிறார் , வேலை செய்கிறார் எவ்வளவு நேரம் அதில் வேலை செய்கிறார் மவுஸ் மற்றும் கீபோர்டில் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார் என்பதை கண்காணிக்க கூடிய ஒரு கருவி இது.

காக்னிசன்ட்நிறுவனம் ஒரு கணினி தொடர்ந்து 5 நிமிடங்கள் எந்த ஆக்டிவும் இல்லாமல் இருந்தால் அந்த ஊழியர் IDLE நிலையில் இருப்பதாகவும் 15 நிமிடங்களுக்கு அந்த லேப்டாப் இயங்காமலே இருந்தால் away from system என்றும் இந்த கருவி குறிப்பிட்டு விடும் .இந்த ரிப்போர்ட் உடனடியாக அவர்களின் மேலாளர்களுக்கு சென்று விடும் என சொல்லப்படுகிறது. இது ஐடி ஊழியர்கள் குறிப்பாக காக்னிசன்ட்ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .
இந்த சூழலில் தான் காக்னிசன்ட்நிறுவனம் விளக்கம் தந்திருக்கிறது எங்கள் நிறுவனத்தில் அவ்வப்போது ஊழியர்கள் உற்பத்தி திறனை கண்காணிக்கும் கருவிகளை நாங்கள் பயன்படுத்துவோம், இது வழக்கமாகவே அனைத்து நிறுவனங்களும் மேற்கொள்ளக்கூடிய ஒரு விஷயம்தான் என தெரிவித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பிராஜெக்ட்டின் செயல்முறை படிகள் , அதில் தொடர்புடைய நேர அளவீடுகளை கிளைண்டுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது போன்ற கருவிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம் என தெரிவித்திருக்கிறது.
இந்த கருவிகள் ஊழியர்களின் தனிப்பட்ட செயல் திறனை கண்காணிக்கவோ அல்லது மதிப்பிடுவோ வடிவமைக்கப்படவில்லை அல்லது பயன்படுத்தப்படவில்லை என கூறியுள்ளது. இந்த கருவிகள் ஊழியர்களின் ஒப்புதலை பின்பற்ற பின்னரே அவர்களின் லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் என்றும் இதை வைத்து அந்த ஊழியரின் செயல் திறனை ஒருபோதும் மதிப்பீடு செய்ய மாட்டோம் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது. கிளைண்டுகளுக்கு ஒரு ப்ராஜெக்டின் செயல்முறை அதனை முடிக்க தேவைப்படும் நேரம் ஆகியவை குறித்து புரிதலை ஏற்படுத்தவே இந்த கண்காணிப்பு கருவி தேவைப்படுகிறது என கூறியுள்ளனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications