அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கினாலும் இந்தியாவில் 50 சதவீத ஊழியர்களை கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் காக்னிசன்ட் நிறுவனம் இந்த ஏஐ யுகத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு புதிய மாற்றத்திற்கு வித்திட்டு உள்ளது.
ஐடி சேவை துறையில் காக்னிசென்ட் கடந்த 3 வருடமாக மிகப்பெரிய மாற்றத்தையும் அதிரடிகளையும் காட்டி வருகிறது. இன்போசிஸ் முன்னாள் ஊழியரான ரவிகுமார் காக்னிசென்ட்-ன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டதில் இருந்து உயர்மட்ட நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் முதல் போட்டி நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகளை ஈர்ப்பது வரையில் பல சம்பவங்களை செய்தார்.

இந்த நிலையில் ரவிகுமார் தலைமையிலான காக்னிசென்ட் சாப்ட்வேர் டெவலப்மென்ட்-ல் உதவி செய்யும் வகையில், கூகுளின் Gen AI தளமான ஜெமினி- ஐ பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஐடி ஊழியர்களுக்கு ஜெமினி தளத்துடன் இணைந்து பணியாற்ற பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் உள் செயல்பாடுகள் மற்றும் தளங்களிலும் ஜெமினியின் மேம்பட்ட திறன்களை இணைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
"கூகூள் கிளவுட் சேவைக்கு ஜெமினியைப் பயன்படுத்துவதன் மூலம், காக்னிசன்ட் நிறுவனத்தின் ஐடி பிரிவு வல்லுநர்கள், வேகமாகவும் திறமையாகவும் கோடுகளை எழுதவும், டெஸ்ட் செய்யவும், பயன்படுத்த முடியும்.
இதன்மூலம் வாடிக்கையாளர் அப்ளிகேஷனை உருவாக்குவதற்கும், நிர்வகிப்பதற்குமான நம்பகத்தன்மை மற்றும் செலவு திறன் மேம்படுத்தப்படும் என்று காக்னிசென்ட் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கூகுள் கிளவுடின் செயற்கை நுண்ணறிவு சேவைகளைப் பயன்படுத்த காக்னிசன்ட் நிறுவனம் உதவி செய்யும்.
பெங்களூரு, லண்டன் மற்றும் டெக்சாஸ், பிளானோ ஆகிய இடங்களில் உள்ள தனது கிளவுட் AI இன்னோவேஷன் மையங்களில் தலா ஒரு ஜெமினி ஸ்டுடியோவை நிறுவ காக்னிசன்ட் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குதல், வடிவமைத்தல் மற்றும் விரிவாக்க முடியும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications