பெங்களுரு: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பணி நீக்கமும் தலை தூக்கி வருகிறது. அதிலும் சர்வதேச நாடுகளை சார்ந்துள்ள தகவல் தொழில் நுட்ப துறையில், இந்த பணி நீக்கமானது மிக அதிக அளவில் இருந்து வருகிறது.
குறிப்பாக ஐடி துறையினை பொருத்தவரையில் இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளையே சார்ந்துள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் என்பது அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், ஐடி துறையானது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளில் ஐடி துறையில் பணி நீக்கம் அதிகரித்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்
அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான காக்ணிசன்ட் அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது குறித்து வெளியான அறிக்கையில், காக்ணிசன்ட் நிறுவனம் அதன் பெஞ்ச் ஊழியர்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பில் இல்லாத ஊழியர்கள்
அதாவது அதன் பெஞ்ச் ஊழியர்களில் தற்போது எந்த திட்டத்திலும் இல்லாதவர்களை பணி நீக்கம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஐடி சேவை நிறுவனங்களில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் பில் இல்லாத ஊழியர்களாகத் தான் கருதப்படுகின்றன. ஏனெனில் பெஞ்ச் ஊழியர்களில் ஆதாரம் இல்லா ஊழியர்களாக கருதப்படுகின்றன.
எத்தனை பேர் பணி நீக்கம்
இந்த நிலையில் தான் இந்தியா முழுவதும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை மற்றும் கர்நாடக ஊழியர் சங்கங்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். காக்ணிசன்ட்டின் இந்த நடவடிக்கையால் பல ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட போகிறார்கள் என்றும் இந்த சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆக காக்ணிசன்ட்டின் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக , யூனியன் சங்கங்கள் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளன.
41 நாள் கழித்து ராஜினாமா
காக்ணிசன்ட்டின் பெஞ்ச் ஊழியர்கள் 41 நாள் கழித்து தங்களது பணிகளை ராஜினாமா செய்ய சொல்வதாக ஏற்கனவே கடந்த சில வாரங்காளாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது. காக்ணிசன்ட் நிறுவனம் அமெரிக்காவுடையது என்றாலும், அதன் ஊழியர்களில் பெருபாலானவர்கள் இந்திய ஊழியர்களே. ஆக காக்ணிசண்டின் இந்த அதிரடி நடவடிக்கையினால் அதிகம் பாதிக்கப்பட போவதும் இந்திய ஊழியர்களே.
பணியமர்த்தலும் உண்டு
காக்ணிசன்ட் நிறுவனம் அதன் ஊழியர்களில் பலரை பணி நீக்கம் செய்து வந்தாலும், சில பணிகளுக்கு பணியமர்த்தல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதோடு தொடர்ந்து முதலீட்டினையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது, இது குறிப்பாக ஊழியர்களின் திறனை அதிகரிப்பதற்காக பயன்படும் என்றும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications