விப்ரோ நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய மூத்த அதிகாரியும், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜதின் தலால் தனது பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிர்வாகத்திற்கு மட்டும் அல்லாமல் சக ஐடி ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.
இவர் ராஜினாமா செய்த அடுத்த சில நாட்களிலேயே சென்னையில் துவங்கப்பட்டு தற்போது அமெரிக்க ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் ஜதின் தலால் அவர்களை தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிப்பதாக அறிவித்து அடுத்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஜதின் தலால் சம்பளம் குறித்த அறிவிப்பு வெளியாகி கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 2023 டிசம்பர் மாதம் முதல் தனது பணியை துவங்க உள்ள ஜதின் தலால் 2 மடங்கு அதிக சம்பளத்துடன் சேர்ந்துள்ளார்.
காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஜதின் தலால்-க்கு வருடாந்திர அடிப்படை சம்பளமே 750,000 டாலர், இது விப்ரோ நிறுவனத்தில் அவர் பெற்று இருந்த சம்பளத்தை காட்டிலும் 2 மடங்கு அதிகமான தொகை. காக்னிசன்ட் நிறுவனம் ஜதின் தலால்-க்கு கொடுத் ஆஃபர் லெட்டர் படி...
ஜதின் தலால் வருடாந்திர அடிப்படையில் சுமார் 5,200,000 டாலர் சம்பளமாக பெற உள்ளார், இது விப்ரோ நிறுவனத்தில் அவர் வாங்கிய சம்பளத்தை காட்டிலும் 5 மடங்கு அதிகமானது. 2023 ஆம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மோசமான செயல்பாடுகள் காரணமாக ஜதின் தலால் அவர்களின் சம்பளம் சுமார் 32 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் 2022 ஆம் நிதியாண்டில் பெற்ற 1. 6 மில்லியன் டாலரை காட்டிலும் 2023 ஆம் நிசியாண்டில் 1.08 மில்லியன் டாலர் தொகையை பெற்றார். தற்போது விப்ரோ இவருக்கு சுமார் 5.2 மில்லியன் டாலர் சம்பளத்தை அளிக்க உள்ளது. 5 மடங்கு சம்பள உயர்வை யார் மிஸ் பண்ணுவாங்க..?
இந்த சம்பளத்தில் சுமார் 1.85 மில்லியன் டாலர் மதிப்பிலான பர்பாமென்ஸ் restricted stock units-களையும், 1.85 மில்லியந் டாலர் மதிப்பிலான restricted stock units-களையும் வழங்க உள்ளது. மேலும் ஜதின் தலால்-க்கு வருடம் 25 நாள் விடுமுறை எடுக்கு அனுமதிக்கப்படுகிறது.
காக்னிசென்ட் நிறுவனம் ஜதின் தலால் அமெரிக்காவில் பணியாற்றா விசா ஏற்பாடு செய்ய உள்ளது, விசா பெற முடியாத பட்சத்தில் பிரிட்டன் நாட்டில் இருந்து பணியாற்றி வேண்டி வரும்.


Click it and Unblock the Notifications