இந்தியர்களுக்கு தான் வாய்ப்பு.. காக்னிசண்டின் சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாகவே ஐடி நிறுவனங்கள் பெரும் அளவிலான பணியாளார்களை பணியமர்த்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காக்னிசண்ட் நிறுவனம் பிசிஏ, பி.எஸ்சி மாணவர்களை பல்வேறு பணியிடங்களுக்காக பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இது 2020 மற்றும் 2021ல் வெளிவந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்! 1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்!

இதற்கான கடைசி தேதி ஜனவரி 6, 2022ம் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 முக்கிய பணியமர்த்தல்

முக்கிய பணியமர்த்தல்

முழு நேர ஊழியர்களுக்கான இந்த பணியமர்த்தலில், வருட சம்பளம் 2,52,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் புரோகிராமர் (programmer trainee roles) பணியிடங்களுக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது பிசிஏ/பிஎஸ்சி (ஐடி/கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் டெக்னாலஜி/கணிதம்/இயற்பியல்/ வேதியியல். ஸ்டேட்டிக்ஸ் உள்ளிட்ட 2020/2021 மாணவர்கள் தகுதியான மாணவர்கள் என நிர்ணயம் செய்துள்ளது.

60% மார்க் வேண்டும்

60% மார்க் வேண்டும்


மேலும் இந்த பணிக்கு முதுகலை பட்டதாரிகள் தகுதியவற்றவர்கள். விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பினை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று இருக்க வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது இளங்கலை படிப்பில் 60% மார்க் பெற்றிருக்க வேண்டும். அரியர்கள் எதுவும் இருக்க கூடாது.

இது கண்டிசன்
 

இது கண்டிசன்

அதேபோல விண்ணப்பதாரர்கள் படிப்பு முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகியிருக்க கூடாது. இந்த சலுகையானது இந்தியர்களுக்கு மட்டும் தான். இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் விண்ணபிக்கலாம். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி புரியலாம். அதே போல எந்த ஷிப்ட் வேண்டுமானாலும் போடலாம். ஆக எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும்.

மிகப்பெரிய வாய்ப்பு

மிகப்பெரிய வாய்ப்பு

அதேபோல ஊழியர்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தால் இதற்கு தகுதியற்றவர்கள். இவர்கள் குறைந்த அளவிலான கோடிங், வடிவமைப்பு உள்ளிட்ட பல அம்சங்களுக்காக பணிபுரிய வேண்டியிருக்கும். இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ், ஹெச் சி எல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பணியமர்த்தல் குறித்து ஏற்கனவே பல முறை அறிவிப்புகளை அறிவிப்புகளை கொடுத்துள்ள நிலையில், காக்னிசண்டின் இந்த அறிவிப்பு இளநிலை பட்டதாரிகளுக்கும், குறிப்பாக இந்திய பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant plans to hiring BCA, BSc graduates in India

Cognizant plans to hiring BCA, BSc gratuates in india/இந்தியர்களுக்கு தான் வாய்ப்பு.. காக்னிசண்டின் சூப்பர் அறிவிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X