இப்போது கிடையாது.. சம்பள உயர்வை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்த காக்னிசென்ட்.. காரணம் என்ன?

சென்னை: பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், அதன் வருடாந்திர ஊதிய உயர்வை நான்கு மாதங்கள் தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது. வழக்கம் போல் ஏப்ரலில் கொடுக்காமல் தற்போது ஆகஸ்ட் மாதத்தில் வழங்குவதாக அறிவித்துள்ளது. தகுதியான பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உயர்வுகளைப் பெறத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், அதன் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ஊதியத்தை உயர்த்தும் என தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது.

இப்போது கிடையாது.. சம்பள உயர்வை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைத்த காக்னிசென்ட்.. காரணம் என்ன?

மென்பொருள் சேவைகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள் அதிக மேக்ரோ பொருளாதார சிக்கல்களை சந்திப்பதால், சம்பள உயர்வை ஒத்திவைப்பதற்கான சூழல் ஏற்படுகிறது. மேலும் பிற ஐடி நிறுவனங்களும் மேக்ரோ பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், பெரும்பாலான ஊழியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு சம்பள உயர்வுகளைப் வழங்கியுள்ளதாக தெரிவித்தது. அதாவது அக்டோபர் 2021, 2022 மற்றும் ஏப்ரல் 2023 ஆம் ஆண்டுகளில் வழங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த வருடம், அதனை ஆகஸ்ட் மாதத்தில் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. உலகளவில் தகுதியான ஊழியர்களுக்கு நிறுவனம் வருடாந்திர போனஸ்களையும் அளித்துள்ளது. இந்த தொடர்ச்சியானது, எங்களின் திறமையான ஊழியர்களின் பங்களிப்புகளை தொடர்ந்து அங்கீகரிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவித்துள்ளது.

பிப்ரவரியில், காக்னிசென்ட் இந்தியாவில் தனது ஊழியர்களுக்காக ஒரு புதிய கொள்கையைத் தொடங்கியது, அங்கு அவர்கள் வாரத்திற்கு மூன்று முறை அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள். Teaneck ஐ தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், 347,700 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட உலகளாவிய குழுவைக் கொண்டுள்ளது, அவர்களில் சுமார் 254,000 பேர் இந்தியாவில் உள்ளனர்.

டிசம்பரில் முடிவடைந்த 2023 ஆம் நிதியாண்டின் Q 4 காலாண்டில், காக்னிசென்ட்டின் வருவாய் முந்தைய ஆண்டை விட 1.7 சதவீதம் குறைந்து 4.76 பில்லியன் டாலர்களை எட்டியது. இது பலவீனமான தேவை காரணமாக இருக்கலாம். இருப்பினும், அதன் லாபம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகரித்து, 558 மில்லியன் டாலர்களை எட்டியது.

2023 ஆம் ஆண்டில், காக்னிசென்ட் முந்தைய ஆண்டை விட வருவாயில் சிறிது சரிவைக் கண்டது, 0.4 சதவீதம் குறைந்து $19.4 பில்லியனாக இருந்தது. 2024 ஆம் நிதியாண்டின் Q 1 காலாண்டில், காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் வருவாய் $4.68 பில்லியன் முதல் $4.76 பில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறது. இது கடந்த ஆண்டின் இதே Q 1 காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.7 சதவீதம் முதல் 1.2 சதவீதம் வரை குறைந்துள்ளது.

காக்னிசென்ட் நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டிருந்தாலும், இது இந்திய பிற நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+