பெங்களூரு: இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் இருந்து மூத்த அதிகாரிகளை அதிகப்படியான சம்பளத்தில் நியமித்து மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (CTS) தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. கடந்த மாதம் டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ, இன்போசிஸ் என நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் தற்போது காக்னிசன்ட் நிறுவனம் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 22.2 சதவீதம் அதிகரித்து 566 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 546 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் பதிவு செய்த 22.2 சதவீத லாப வளர்ச்சி டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் காட்டிலும் அதிகம் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

மேலும் காக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய் ஜூன் காலாண்டில் 4.85 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 4.89 பில்லியன் டாலராகவும், முந்தைய காலாண்டில் 4.76 பில்லியன் டாலராகவும் இருந்தது. காக்னிசன்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக ரவி குமார் பதவியேற்றியதில் இருந்து இந்நிறுவனம் அதிரடியாக செயல்பட்டு வருகிறது.
காக்னிசன்ட் நிறுவனம் முதன் முதலில் துவங்கிய போது சென்னையில் தான் துவங்கப்பட்டது, அதன் வர்த்தக நன்மைக்காக சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு பதிவு செய்யப்பட்டு அமெரிக்க நிறுவனமாக மாறியது. என்னதான் அமெரிக்க கம்பெனியாக இருந்தாலும் இந்தியாவில் தான் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டை பின்பற்றுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான வருவாய் 19.3 முதல் 19.5 பில்லியன் டாலராக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ள காக்னிசன்ட், இரண்டாவது காலாண்டில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,36,300 ஆக குறைந்துள்ளது. முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 8,100 பேரும், கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடுகையில் 9,300 பேரும் குறைந்துள்ளனர்.
மேலும் காக்னிசன்ட் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 13.6 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 19.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 22.2 சதவீதம் அதிகரித்துள்ள வேளையில் தனது சகபோட்டி நிறுவனங்களின் நிலை என்ன..? டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சந்தை கணிப்புகளைத் தாண்டி ரூ.12,040 கோடி அளவிலான லாபத்தைப் பதிவு செய்து 9% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் HCL டெக்னாலஜிஸ் 2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.4,257 கோடி அளவிலான லாபத்தைப் பெற்ற நிகர லாபம் 20% அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிகர லாபம் ரூ.6,368 கோடி பதிவு செய்து 7.1% அளவிலான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,003 கோடி என இக்காலாண்டு முடிவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் அறிவிக்கப்பட்ட ரூ.2,870 கோடியுடன் ஒப்பிடும்போது 4.6% அதிகமாகும்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications