இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் காக்னிசண்ட் நிறுவனத்தின் லோகோ-வை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. எல்லாம் டிரேட்மார்க் காஃபிரைட் பிரச்சனை தான்.
காக்னிசென்ட் நிறுவனம் லிங்க்ட்இன், எக்ஸ், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களில் தனது லோகோவை நீக்கியுள்ளது. பெங்களூரு அடிப்படையிலான அத்தியாதி டெக்னாலஜிஸ் நிறுவனம் தொடுத்த வழக்கில் காக்னிசென்ட்-க்கு எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால் காக்னிசென்ட் தனது லோகோவை நீக்கியுள்ளது.

லோகோ-வை பயன்படுத்த தடை செய்யும் உத்தரவை பாம்பே உயர் நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், உலகளாவிய ஐடி சேவை நிறுவனங்களுக்கும் உள்ளூர் டெக் நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தக உரிமை போட்டியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலோக் அராதே மற்றும் நீதிபதி சந்தீப் வி.மார்னே கொண்ட அமர்வு ஆகஸ்ட் 26, 2025 அன்று வழங்கப்பட்ட உத்தரவில், ஜூன் 2024-ல் ஒற்றை நீதிபதி அமர்வால் தளர்த்தப்பட்ட தடை உத்தரவை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.
இந்த வழக்கு, மார்ச் 2024-ல் தொடங்கியது, அத்தியாதி டெக்னாலஜிஸ் நிறுவனம், காக்னிசன்ட் நிறுவனத்தின் லோகோ தங்களது லோகோவை மிகவும் ஒத்துள்ளது என்றும், இது அவர்களின் வர்த்தக டிரேட்மார்க் உரிமையை மீறுவதாகவும் குற்றம் சாட்டியது. அத்தியாதி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் லோகோ ஆரஞ்சு நிற hexogonal தேன் கூடு (hexagonal honeycomb) ஆகவும், காக்னிசன்ட் நிறுவனத்தின் லோகோ நீல நிற 3D cube ஆகவும் இருக்கும்.

காக்னிசென்ட்-க்கு இந்த லோகோ-வை பயன்படுத்த கூடாது என 2024 மே மாதமே தடை விதிக்கப்பட்ட நிலையில் மேல் முறையீட்டின் காரணமாக ஜூன் 2024 மாத உத்தரவில் தடை நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து அத்தியாதி டெக்னாலஜிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்த நிலையில் தற்போது மீண்டும் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
காக்னிசண்ட் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, தற்போது தனது சமூக ஊடக ப்ரொபைலில் லோகோவை நீக்கி, பெயரை மட்டும் காட்டுகிறது. இந்த தடை இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நாங்கள் இணங்குகிறோம். சட்டரீதியான தீர்வுகளை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் உரிமையை பாதுகாக்க கிடைக்கும் அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்" என்று கூறினார்.

காக்னிசன்ட் நிறுவனம் ஃபார்ச்சூன் 250 நிறுவனங்களில் ஒன்றாக, 3,40,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது, இதில் மூன்றில் நான்கு பங்கு இந்தியாவில் உள்ளனர்.
அத்தியாதி டெக்னாலஜிஸ், 2007-ல் நிறுவப்பட்டது, பெங்களூரில் தலைமையகம் கொண்டு சுமார் 1,400 ஊழியர்களுடன் 100 அலுவலகங்களில் செயல்படும் இந்நிறுவனம், 21 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, மாதந்தோறும் 3,000 கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
More From GoodReturns

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications