தொடர் ராஜினாமா செய்யும் அதிகாரிகள்..! காக்னிசென்ட் நிறுவனத்தில் அடுத்த உயரதிகாரி பதவி விலகல்!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட்டில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய காக்னிசென்ட் நிறுவனத்தில் மேலும் ஒரு உயர் அதிகாரி ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்னிசென்ட் நிறுவனம் உலகின் முன்னணி தொழில்நுட்ப சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியாக செயல்பட்டு வந்த கௌரவ் சந்த் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கௌரவ் சந்த் பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து காக்னிசென்ட் நிறுவனத்தில் 25 ஆண்டுகாலம் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்த தியா ஹேடன் அந்த பொறுப்பினை ஏற்பார் என காக்னிசென்ட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 தொடர் ராஜினாமா செய்யும் அதிகாரிகள்..! காக்னிசென்ட் நிறுவனத்தில் அடுத்த உயரதிகாரி பதவி விலகல்!!

கடந்த மாதம் தான் காக்னிசென்ட் நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைவராக இருந்த ராஜேஷ் நம்பியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். இதனை அடுத்து அவர் மென்பொருள் தொழில் கூட்டமைப்பான நாஸ்காமின் தலைவராக இணைந்தார். இதனிடையே கௌரவ சந்தை அடுத்து அந்த பொறுப்பினை நிரந்தரமாக கவனித்துக் கொள்வதற்கான நபரை தேடி வருவதாக காக்னிசென்ட் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கௌரவ் சந்த் காக்னிசென்ட் நிறுவனத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் தற்போது அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டு இருக்கும் ஹேடன் கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் மார்க்கெட்டிங் பிரிவில் அனுபவம் கொண்டவர் என்பதால், இந்த பணி மாறுதல்கள் சுமூகமாக நடைபெறும் என்றும் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு வழக்கம்போல இயங்கும் என்றும் காக்னிசென்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
கௌரவ சந்த் 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காக்னிசென்ட் நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்துதல் பிரிவில் மிகச் சிறப்பாக பணியாற்றினார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கௌரவ் சந்த் இதற்கு முன் டெல் டெக்னாலஜி , ரேம்பேக்ஸி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

காக்னிசென்ட் என்பது ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது 1994 ஆம் ஆண்டு சென்னையில் Dun & Bradstreet என்ற ஒரு நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவாக தான் தொடங்கப்பட்டது.

பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் வெளியில் இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற தொடங்கியது. 50 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட காக்னிசென்ட் தற்போது 3.36 லட்சம் ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு 19.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+