இன்றைய வேலைச்சூழலில், ஊழியர்களின் உற்பத்தித் திறன் என்பது நிறுவனங்களுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. கோவிட் காலத்திற்குப் பிறகு ஹைபிரிட் வேலை முறை பரவலாகிவிட்ட நிலையில், பாதி நாள் வீட்டிலும், பாதி நாள் அலுவலகத்திலும் ஊழியர்கள பணியாற்றி வருகின்றனர். இதனால் ஐடி துறை நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கினாலும், இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது முன்னணி ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்ரேஷன், ஊழியர்களின் மவுஸ் மற்றும் கீபோர்டு இயக்கத்தை பயன்படுத்தி உற்பத்தித்திறனை அளவிடும் புதிய கருவிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த விஷயம் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக நிர்வாகத்தின் மைக்ரோ-டிராக்கிங் முறைகள் ஊழியர்களை நம்மதியை கெடுக்கும் விஷயமாக பார்க்கப்படும் வேளையில் காக்னிசென்ட் எடுத்துள்ள முடிவுகள் காக்னிசென்ட் ஊழியர்களை தாண்டி மற்ற நிறுவன ஊழியர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் காக்னிசென்ட் இதை செய்தால் மற்ற நிறுவனங்களும் இதேபோன்ற முடிவுகளை கையில் எடுக்கும் என்ற அச்சம் தான்.
காக்னிசென்ட் சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடுவது குறித்த செய்தி ஐடி ஊழியர்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியது. இந்த நிலையில் காக்னிசென்ட் நிர்வாகம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, தனது மூத்த நிர்வாக அதிகாரிகளுக்கு புதிய டூல் ஓன்றைய பயன்படுத்த சிறப்புப் பயிற்சியை தொடங்கியது என லைவ்மின்ச் செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
இது தான், புரோஹான்ஸ் (ProHance) எனும் ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தும் கருவியாகும். இந்தப் கருவியை தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தில் சில திட்டங்களில் மட்டுமே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த டூல் மூலம் ஒவ்வொரு ஊழியர்களும் வேலை நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை விரிவான முறையில் புரிந்து கொள்ள முடியும். இந்த டூல் பயன்படுத்துவது மூலம், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கிய படியாக காக்னிசென்ட் நிர்வாகம் நம்புகிறது.
இந்த ProHance டூல் மூலம் ஊழியர்கள் தங்கள் கம்பியூட்டர் அல்லது லேப்டாப்பில் இருந்து விலகிச் செல்லும் நேரத்தை எளிதாக கண்டறிய முடியும். உதாரணமாக, மவுஸ் அல்லது கீபோர்டு இயக்கம் 300 வினாடிகள் வரை இல்லாவிட்டால், அந்த ஊழியர் 'இனாக்டிவ்' என்று குறிக்கப்படுவார்.
அதேபோல், 15 நிமிடங்கள் தொடர்ந்து லேப்டாப்-ஐ பயன்படுத்தாவிட்டால், இந்த ஊழியர் 'சிஸ்டமிலிருந்து விலகிய இருக்கிறார்' என்று வகைப்படுத்தப்படுவார். இந்த நேர வரம்புகள், ஒவ்வொரு ப்ராஜெட் அடிப்படையில் மாற்றப்படலாம். இதன் மூலம், ஒரு ஊழியர் எந்த அளவுக்கு திறம்பட வேலை செய்கிறார்கள் என்பதை தெளிவாக அறிய முடியும்.
புரோஹான்ஸ் போன்று பல கருவிகள் சந்தையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல நிறுவனங்களை இதை பெரிய அளவில் பயன்படுத்தி வந்தாலும், காக்னிசென்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இத்தகைய டூல்களை பயன்படுத்துவது பெரிய அளவிலான தாக்கத்தை வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புரோஹான்ஸ் மற்றும் சபியன்ஸ் போன்ற டூல்கள் நிறுவனத்தில் ஒவ்வொரு ஊழியரும் கணினியில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள், முக்கிய திட்டங்களில் பணியாற்றுவோர் எத்தனை மணி நேரம் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர், ஊழியர்களிந் காஃபி பிரேக், லன்ச் பிரேக் போன்றவை எவ்வளவு நீளமானதாக உள்ளது என பல விஷயங்களை ஆய்வு செய்ய முடியும்.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இந்த கருவியை தற்போது எந்தொரு நிறுவனமும் ஊழியர்களின் போனஸ், சம்பள உயர்வு அளிப்பதில் இணைக்கவில்லை. இதேபோல் பணிநீக்கம் செய்வதிலும் இதை இணைக்கவில்லை.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications