உலகின் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடங்கிய நிலையில், உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான்கள் முதல் கொண்டு சிறு சிறு ஐடி நிறுவனங்கள் வரையில் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வந்தன.
தற்போது 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு வரும் படி அழைத்து வந்தன.
எனினும் தற்போது ஓமிக்ரான் அச்சம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் வீட்டில் இருந்து பணிபுரிய கூறி வருகின்றன.
வீட்டில் இருந்து பணி
இந்த நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், ஊழியர்களை இன்னும் கொஞ்ச காலத்திற்கு வீட்டில் இருந்தே பணிபுரிய கூறி வருகின்றன. இதற்கிடையில் காக்னிசண்ட் நிறுவனம் அதன் 3 லட்சம் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய கூறியுள்ளது.
பயணங்களை தவிருங்கள்
மேலும் ஊழியர்களை ஏப்ரல் 2022ல், காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவனம், அதன் ஊழியர்களை திரும்ப அழைக்கும். அதுவரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுங்கள். ஆக அலுவலக ரீதியிலான பயணத்தினை தவிருங்கள்.
கலப்பின மாதிரி
நிறுவனம் கலப்பின மாதிரியை ஏற்றுக் கொள்ளும். எங்களின் புதிய நிலையான வேலை மாதிரியானது வாரத்தில் மூன்று நாட்காள் அலுவலகத்தில் இருந்தும், இரண்டு நாட்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் இருந்தும் பணிபுரிந்து கொள்ளலாம். இது வாடிக்கையாளர்களின் தேவை, அவர்களின் வணிகத் தேவைகளை பொறுத்து இருக்கும்.
எத்தனை நாட்கள் அலுவலகம்
இதில் சில ஊழியர்கள் இந்த நிலையில் இருந்து வேறுபடலாம். ஊழியர்களுக்கு அவசியம் இருப்பின் அவர்கள் சில நேரங்களில் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ அலுவலகம் வர வேண்டியிருக்கும். மொத்தத்தில் ஒரு நெகிழ்வான முறையில் பணிபுரிய வேண்டியிருக்கும் என்று காக்னிசன்ட் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மெயில் அறிக்கையில், காக்னிசண்ட்டின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஹம்பரீஸ் தெரிவித்துள்ளார்.
நெகிழ்வான நிலை
மேலும் வாரத்தில் ஒரு நாள் ஆவது அலுவலத்திற்கு திரும்புவது, நம்மில் பெரும்பாலானோருக்கு பெரிய மாற்றமாக இருக்கும். ஹைபிரிட் பணியானது ஊழியர்களுக்கு ஒரு நெகிழ்வான நிலையை அளிக்கும். ஆக நாங்கள் அதற்கேற்ப செயல்படுவோம் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications