சென்னையில் பிள்ளையார் சுழி போட்டு, அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு தற்போது உலகம் முழுவதும் ஐடி சேவை அளித்து வரும் டெக் நிறுவனமான காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், சென்னையில் தனது முக்கியமான ரியல் எஸ்டேட் சொத்தை விற்பனை செய்ய உள்ளது.
காக்னிசென்ட் நிறுவனத்தின் துரைப்பாக்கம் அலுவலகம் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. Cognizant நிறுவனத்தின் இரண்டு இணை நிறுவனர்களான லட்சுமி நாராயணன் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் இந்த அலுவலகத்தில் இருந்து தான் காக்னிசென்ட் நிறுவனத்தை Nasdaq-ல் மணி அடித்துத் துவங்கி வைத்தனர்.

இது சென்னையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் முதல் சொந்தமான வளாகமாகும். அதற்கு முன், Cognizant, அமெரிக்க தூதரகம் அருகே உள்ள CSI கட்டிடம், Elnet மற்றும் Tidel Park இல் வாடகை அடிப்படையில் செயல்பட்டது.
இந்த ஐடி கேம்பஸ், OMR இல் உள்ள ஓக்கியம் துரைப்பாக்கத்தில் 15 ஏக்கர் பரப்பளவில், சுமார் நான்கு லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை கொண்டுள்ளது. இந்த ரியல் எஸ்டேட் சொத்தை தான் தற்போது விற்பனை செய்ய காக்னிசென்ட் முடிவு செய்துள்ளது.
இந்த ஐடி கேம்பஸ் மட்டும் அல்லாமல் மொத்த நிலத்தையும் சேர்ந்து ரூ. 750 கோடி முதல் ரூ. 800 கோடி வரையிலான விலை விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான JLL, OMR இல் உள்ள இந்த முக்கிய சொத்தை விற்பனை செய்யும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
JLL ஆலோசனை நிறுவனம் உள்ளூர் ரியல் எஸ்டேட் ஜாம்பவான்களான பாஷ்யம் குரூப், காசாகிராண்டே உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்று சந்தை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
காக்னிசென்ட் இந்த சொத்தை விற்பனை செய்த பின்பு தனது இந்திய தலைமையகத்தை 2024 டிசம்பர்க்குள் GST சாலையில் உள்ள MEPZ வளாகத்தில் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த சொத்தை விற்பது மட்டும் அல்லாமல் சென்னையில் இருக்கும் பெரும்பாலான ரியல் எஸ்டேட் குத்தகை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இந்நிறுவனத்திற்குச் சொந்தமான MEPZ, சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய மூன்று கட்டிடங்களில் அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் உள்ளது.
இதற்காக காக்னிசென்ட் சென்னையில் Ramanujan IT Park, DLF மற்றும் R A Puram ஆகிய பிரபலமான ஐடி பார்குகளில் இருக்கும் குத்தகை இடங்களை காலி செய்து வருகிறது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு கட்டப்பட்ட துரைப்பாக்கம் வளாகம் தற்போது விற்க முக்கியமான காரணம், இந்த வளாகம் நீர்நிலைக்கு அருகில் இருப்பதால், மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு முழங்கால் ஆழம் வரை தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இந்த ஐடி வளாகத்தில் மழை நீர் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஓரு தரை தளத்திற்குள் நுழைந்து பல கட்டமைப்புகளைச் சேதம் ஏற்படுத்தியது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications