நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் திடீரென சென்னை, ஹைதராபாத்தில் அதற்குச் சொந்தமாக உள்ள அலுவலக சொத்துகளை விற்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சாப்ட்வேர் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் கச்சிபௌலி வளாகத்தில் உள்ள 10 ஏக்கர் நிலம், சென்னையின் சிறுசேரியில் உள்ள 14 ஏக்கர் வளாகம் ஆகியவற்றை விற்க முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் வாடகைக்கு இருந்த 11 மில்லியன் சதுர அடியிலான இடங்களையும் காலி செய்யவிருக்கிறது. சில இடங்களில் வாடகையைக் குறைத்துப் பேசி அலுவலைத் தொடர்கிறது.

காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோவை மறு மதிப்பீடு செய்து வருகிறது. இது நிறுவனத்தில் லாபகரமான நிலைக்கு செல்ல எடுக்கப்படும் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதி தான். இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 400 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த காக்னிசென்ட் திட்டமிட்டுள்ளது.
ஹைதராபாத், சென்னை ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்வது மூலம் அதன் வர்த்தகம், ஊழியர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை. இதேபோல் ஊழியர்களின் வேலைவாய்ப்புக்கும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, சொல்லப்போனால் புதிய நிர்வாகத்தின் கீழ் இப்போது தான் வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியுள்ளது காக்னிசென்ட்.
2023 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிந்த மூன்றாவது காலாண்டு காலகட்டத்தில் காக்னிசென்ட் டெக்னாலஜிஸ்-ன் நிகர லாபம் 16 சதவீதம் குறைந்து 525 மில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் நிகர லாபம் 629 மில்லியன் டாலராக இருந்தது. செப்டம்பர் காலாண்டில் இதன் வருவாய் கிட்டத்தட்ட 4.89 பில்லியன் டாலராக இருக்கிறது.
2023 மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 3,46,600. இது இதற்கு முந்தைய காலாண்டைவிட 1000 பேர் அதிகமாகும்.
மூன்றாவது காலாண்டில் அதிக வாடிக்கையாளர் திருப்தியை பெற்றுள்ளோம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையைத் தருவதற்கான புதிய முதலீடுகளை செய்கிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் செலவுகளைக் குறைக்கலாம்.
மேலும் டிஜிட்டல் முறையில் தங்கள் வணிகங்களை மாற்றவும், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் துறையில் முயற்சி எடுத்துள்ளோம் என்று காக்னிசென்ட் சிஇஓ ரவி குமார் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜான் சீக்மண்ட் கூறுகையில், எங்களுடைய வருடாந்திர வருவாய் இலக்கை குறைத்துள்ளோம். செலவின அழுத்தமும் அதன் தாக்கமும் வருவாய் எதிர்பார்ப்புகளில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
More From GoodReturns

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications