சென்னை: காக்னிசன்ட் பிரஷ்ஷர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த சம்பளத்தை விடவும் குறைவாக வெறும் 2.25 லட்சம் சம்பளம் வழங்கியதால் ஐடி துறையில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதை தொடர்ந்து அடுத்த பெரும் சர்ச்சையாக காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், தனது பணியாளர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வை வெறும் 1% மட்டுமே வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நான்கு மாதங்கள் தாமதமாகச் சம்பள உயர்வை வழங்கியுள்ள இந்த நிறுவனம், வெறும் 1% சம்பள உயர்வு மட்டுமே சம்பள உயர்வைக் கொடுத்திருக்கும் வேளையில் காக்னிசன்ட் ஊழியர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதேபோல் காக்னிசென்ட் அதிகபட்சமாக 5% வரை மட்டுமே சம்பள உயர்வு வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கிய காக்னிசன்ட், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் தகுதியுள்ள ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், சம்பள உயர்வைத் தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலைமை நிலையற்றதாகவும், பணவீக்கம் அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனாலேயே சம்பள உயர்வு குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காக்னிசென்ட் ஊழியர்கள் வெளியிட்ட தரவுகள் படி, 3 ரேட்டிங் பெற்றவர்களுக்கு 1 முதல் 3% வரை, 4 ரேட்டிங் பெற்றவர்களுக்கு 4% மற்றும் 5 ரேட்டிங் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 4.5% முதல் 5% வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், நாஸ்டாக்-ல் பட்டியலிடப்பட்ட இந்த காக்னிசென்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சுமார் 7% முதல் 11% வரை சம்பள உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறைவான சம்பள உயர்வு அறிவிப்போடு, நேற்றைய பர்ஷ்ஷர்களுக்கான ரூ.2.52 லட்சம் என்ற வருடாந்திர சம்பளம் வழங்கியதற்காக காக்னிசன்ட் ஐடி ஊழியர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளது.
நியூ ஜெர்சி தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் சுமார் 2,54,000 ஊழியர்கள் உள்ளனர், இது மொத்த ஊழியரில் சுமார் 70% பேர் இந்தியாவில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். ஜூன் காலாண்டில் மொத்த ஊழியர் எண்ணிக்கை 8,100 குறைந்து 3,36,300 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஊழியர் எண்ணிக்கை 9,300 குறைந்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications