ஐடி ஊழியர்களின் பரிதாப நிலை.. 41 நாட்களுக்கு பின்பு ராஜினாமாவா.. இன்னொரு மோசமான செய்தியும் உண்டு..!

கடந்த வாரம் ஐடி ஊழியர்களின் சங்கமான NDLF தனது அறிவிப்பில், முன்னணி ஐடி நிறுவனமான காக்ணிசன்ட் நிறுவனம், தனது பெஞ்ச் ஊழியர்களை 41 நாட்களுக்கு பிறகு ராஜினாமா செய்ய சொல்வதாக வெளியாகியது. மேலும் காக்ணிசன்ட்டின் இந்த அதிரடியான நடவடிக்கை அதன் ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஐடி ஊழியர்களின் சங்கம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஐடி ஜாம்பவான்களில் ஒருவரான காக்ணிசன்ட் நிறுவனம், தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக ஒரு புத்திசாலித்தனாமான விஷயத்தினை கையாண்டு வருவதாகவும் குற்றம் சாட்டியது.

இது தவிர காக்ணிசன்ட் நிறுவனம் அதன் திட்டத்தினை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.

எதனால் பணி நீக்கம்

எதனால் பணி நீக்கம்

ஆனால் இதற்கு பதில் அளித்த காக்ணிசன்ட் நிறுவனம், கொரோனா வைரஸ் காரணமாக அதன் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதன் வருவாயினையும் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடுத்தர அளவிலான ஊழியர்கள் பணி நீக்கம்

நடுத்தர அளவிலான ஊழியர்கள் பணி நீக்கம்

தற்போது அதன் சென்னை அலுவலகங்களில் உள்ள பெஞ்ச் ஊழியர்களை 41 நாட்களுக்கு பிறகு அவர்களின் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணி நீக்கங்கள் பெரும்பாலும் நடுத்தர அளவிலான ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது.

பெஞ்ச் ஊழியர்களை குறிவைக்க என்ன காரணம்?

பெஞ்ச் ஊழியர்களை குறிவைக்க என்ன காரணம்?

காக்ணிசன்ட் குறிப்பாக அதன் பெஞ்ச் ஊழியர்களை ராஜினாமா செய்ய சொல்ல என்ன காரணம்? ஐடி துறைகளில் பெஞ்ச் ஊழியர்கள், செயலில் உள்ள திட்டங்களில் இல்லாதவர்கள். எதிர்கால திட்டங்களுக்கான வைக்கப்படுகிறார்கள். ஒரு ஊழியர் பெஞ்சில் வைக்கப்பட்டவுன் காக்ணிசன்ட் அவர்களை மேம்படுத்துவதற்கு 35 நாட்கள் அவகாசம் வழங்கும். அதன் பிறகு ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தும்.

புதிய திட்டம் என்ன?

புதிய திட்டம் என்ன?

இந்த 35 நாட்களில் அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள். அதற்குள் அவர்கள் அந்த புதிய திட்டத்தினை கண்டறிந்து பணி புரிய வேண்டும். இப்படி செய்ய இயலாதவர்கள் தான் பின் பணி நீக்கம் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று இன்று வெளியான ஒரு அறிக்கையில் கூறப்படுகிறது.

எங்களுக்கு வேறு வழியில்லை

எங்களுக்கு வேறு வழியில்லை

இது குறித்து காக்ணிசன்ட் நிறுவனம், ராஜினாமா செய்யக் கூறிய ஊழியர்களுக்கு அனுப்பிய மெயிலில், எங்களுக்கு இது தவிர வேறு வழியில்லை. அதோடு இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பெஞ்ச் ஊழியர்கள் 35 நாட்களுக்கு மேல் ஏன் இருந்தார்கள் என்பதை விளக்க தனிப்பட்ட விசாரணையில் ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த மெயில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திறனற்ற ஊழியர்கள்

திறனற்ற ஊழியர்கள்

இது மேல்மட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பெரிய அளவு பாதிப்பினை ஏற்படுத்தாது என்றாலும், திறன் அற்ற ஊழியர்களையும் ராஜினாமா செய்யக்கோரி கூறுவதாகவும் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக இது நியாயமற்ற ஒரு முறை என்றும் ஊழியர்கள் மத்தியில் கூறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தொழிலாளர் ஆணையத்திற்கு கடிதம்

தொழிலாளர் ஆணையத்திற்கு கடிதம்

ஐடி மற்றும் ஐடி சார்ந்த ஊழியர்களுக்கான சென்னையை தளமாகக் கொண்ட ஐடி அகில இந்திய மன்றம் ஜூன் 12 அன்று சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு ஒரு மனுவையும், இதே ஜுன் 22 அன்று டெல்லியில் உள்ள தொழிலாளர் ஆணையத்திற்கும் மற்றொரு கடிதத்தினை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களை, ராஜினாமா செய்யக் கோரி கட்டாயப்படுத்துவதாக கூறியுள்ளது.

சட்ட விரோதமாக பணி நீக்கம்

சட்ட விரோதமாக பணி நீக்கம்

இதே மற்றொரு அறிக்கையில், தொற்று நோயை பயன்படுத்தி பல ஊழியர்கள் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் அளவு தெளிவாக இல்லை என்றாலும், ஐடி யூனியன் தொழில் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 18,000 மேற்பட்ட பெஞ்ச் ஊழியர்கள் இருக்கலாம் என்றும், இதே மோசமான செயல்திறனுடன் உள்ள ஊழியர்களில் 27,000 பேர் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு சாதாரண செயல்முறையே

இது ஒரு சாதாரண செயல்முறையே

காக்ணிசன்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் செயல்திறன் மேலாண்மை என்பது ஒரு சாதாரண செயல்முறையாகும். எனினும் இவ்வாறு வெளியாகி வரும் செய்திகளில் பல உண்மை அல்ல என்றும் காக்ணிசன்ட் தெரிவித்துள்ளது. மேலும் இது கிளவுட் அனலிட்டிக்ஸ், டிஜிட்டல் இன்ஜினியரிங், ஐஓடி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.

புதிய திட்டங்கள் தள்ளிப்போகலாம்

புதிய திட்டங்கள் தள்ளிப்போகலாம்

ஆக நாங்கள் ஊழியர்களை மேம்படுத்துவதற்கும், மீளவைப்பதற்கும் முதலீடு செய்து வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏனெனில் சராசரி தொழில் துறை வளர்ச்சியினை விட அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் கொரோனாவிற்கு பின்பு புதிய ஒப்பந்தங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் புதிய திட்டங்கள் தள்ளி வைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பல உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

பணி நீக்கம் அதிகரிக்கும்

பணி நீக்கம் அதிகரிக்கும்

ஆக இதுபோன்ற அசாதாரண நிலைகள், காக்ணிசன்ட் போலவே மற்ற நிறுவனங்களிலும் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இவ்வாறு திறன் அற்ற ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முன்னர் 5 சதவீதம் இருக்கும் என்றால், அது தற்போது 10 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+