இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் சேவைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சிடிஎஸ் எனப்படும் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் தனது டிஜிட்டல் சேவை துறையில் வலிமையாக்கிக்கொள்ள அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்தச் செய்து பலருக்கும் ஐடி துறையில் இருந்து பயத்தை நீங்கி மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
காக்னிசென்ட்
சில மாதங்களுக்கு முன்பு வரையில் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்த காக்னிசென்ட் தற்போது 20000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த வாய்ப்புக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று வெளிவரும் பிரஷ்ஷர்களுக்குத் தான் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது சிடிஎஸ்.
30 சதவீக அதிக வேலைவாய்ப்பு
தற்போதுள்ள கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்கும் காரணத்தால் அவர்களுக்கென பிரத்தியேக வாய்ப்பு அளிக்கும் நோக்கில் வழக்கத்தை விடவும் 30 சதவீதம் அதிக வேலைவாய்ப்பை பிரஷ்ஷர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் எனச் சிடிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தெரிவித்துள்ளார்.
4 லட்சம் சம்பளம்
இதுமட்டும் அல்லாமல் 2020ஆம் ஆண்டு நிறுவனத்தில் சேர்க்கப்படும் பிரஷ்ஷர்களின் சம்பளம் வழக்கத்தை விடும் 18 சதவீதம் அதிகமாகக் கொடுக்க உள்ளோம். அதாவது சுமார் 4,00,000 ரூபாய் அளவிலான வருடாந்திர சம்பளத்தில் ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாகச் சிடிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி Brian Humphries தெரிவித்தார்.
பணீநீக்கம்
செப்டம்பர் காலாண்டில் சிடிஎஸ் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 10,000 முதல் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது புதிதாக 20000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications