இந்தியா ஐடி ஊழியர்களுக்கு ஹெச்1பி விசா என்பது அமெரிக்க வர்த்தக சந்தையைத் தாங்கிப்பிடிக்கும் உயிர் நாடிப்போன்றது, அமெரிக்கச் சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதும், புதிய வர்த்தகத்தைப் பெறுவது, சேவையை டெலிவரி செய்வது, வாடிக்கையாளர்கள் உடனான உறவு என அனைத்திலும் சுமுகமான சூழ்நிலை மற்றும் லாபகரமான வர்த்தகத்தை உருவாக்குவதற்கு ஹெச்1பி விசா மூலம் இந்தியாவில் இருந்து செல்லும் ஊழியர்கள் மிகவும் முக்கியமாக பலமாகவும், பாலமாகவும் உள்ளனர்.
இதில் முக்கியமாக இந்திய ஐடி நிறுவனங்களின் ஆன்சைட் மற்றும் ஆஃப்ஷோர் வர்த்தக மாடலுக்கு, H-1B விசாக்கள் மூலம் மிகக் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் ஒரு காரணியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இவை அனைத்தும் டிரம்ப் தலைமையிலான அரசு ஹெச்1பி விசா வழங்குவதில் 100000 டாலர் கட்டணம், சம்பளம் அடிப்படையிலான விசா வழங்கும் முறை ஆகியவற்றை அறிமுகம் செய்தது மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் ஹெச்1பி விசா வாங்குவதில் இருந்து மொத்தமாகப் பின்வாங்கியுள்ளது.
2027ஆம் நிதியாண்டுக்கான விசா விண்ணப்பங்கள் குறித்து அமெரிக்காவின் Congressional Research Service வெளியிட்ட அறிக்கையின் படி ஹெச்1பி விசாவுக்காக இன்போசிஸ் விண்ணப்பம் செய்த எண்ணிக்கை 91 சதவீதமும், டிசிஎஸ் 95 சதவீதமும் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக காக்னிசென்ட் ஒரு விண்ணப்பத்தைக் கூட சமர்ப்பிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
டிரம்ப் தலைமையிலான அரசு ஹெச்1பி விசா முறையை டெக் நிறுவனங்கள் விதிகளை மீறி பயன்படுத்துவதாகவும், அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோக இது முக்கியமான காரணமாக இருப்பதாகவும் தொடர்ந்து தெரிவித்து வரும் வேளையில் தான் இப்புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்போசிஸ் கடந்த ஆண்டு 8886 விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 759 விண்ணப்பங்களை மட்டுமே சமர்ப்பித்துள்ளது. இதேபோல் டிசிஎஶ் 5955 விண்ணப்பத்திலிருந்து 284 ஆக குறைத்துள்ளது.
காக்னிசென்ட் கடந்த ஆண்டு 3,752 விண்ணப்பங்கள் சமர்ப்பித்த நிலையில் இந்த ஆண்டு ஒரு விண்ணப்பத்தைக் கூட சமர்ப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
இதேபோல் உலகின் முன்னணி ஐடி ஸ்டாஃபிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனம் கடந்த ஆண்டு 24,946 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த நிலையில் இந்த ஆண்டு 92 சதவீதம் குறைந்து 2,055 ஆகக் குறைந்துள்ளது எனச் செப்டம்பர் மாதத்தில் ஒரு அறிக்கை வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு அமெரிக்காவுக்குச் சென்று பணியாற்று வாய்ப்பு கொடுப்பதை மறுப்பது கண்கூடாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications

