ஜெர்மன் நிறுவனத்தை கைப்பற்றிய காக்னிசென்ட்.. 2021ல் இது 4வது நிறுவனம்..!

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் நிறுவனம் வர்த்தக வளர்ச்சிக்காகவும், விரிவாக்கத்திற்காகவும் ஜெர்மனி நாட்டைத் சேர்ந்த ESG மெபிலிட்டி நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ESG மெபிலிட்டி நிறுவனம் கனெக்டெட் கார், ஆட்டோனாமஸ் கார் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கு டிஜிட்டல் ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங் சேவையை வழங்குகிறது.

காக்னிசென்ட் - ESG மெபிலிட்டி

காக்னிசென்ட் - ESG மெபிலிட்டி

ESG மெபிலிட்டி நிறுவனத்தைக் கைப்பற்றுவதன் மூலம் காக்னிசென்ட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் சேவை பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தையும், சேவைகளையும் அளிக்க முடியும்.

ஆட்டோமொபைல் வர்த்தகம்

ஆட்டோமொபைல் வர்த்தகம்

குறிப்பாக உலகளவில் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் உருவாகி வரும் கனெக்டெட் கார் சேவைகள் பிரிவில் காக்னிசென்ட் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ESG மெபிலிட்டி நிறுவனம்

ESG மெபிலிட்டி நிறுவனம்

மேலும் ESG மெபிலிட்டி நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 1000த்திற்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் R&D பிரிவு ஊழியர்கள் காக்னிசென்ட் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளனர். மேலும் ESG மெபிலிட்டி நிறுவனத்தின் ஊழியர்கள், அலுவலகம் மற்றும் வர்த்தகம் ஜெர்மனி மட்டும் அல்லாமல் அமெரிக்கா மற்றும் சீனாவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

OEM நிறுவனங்கள்

OEM நிறுவனங்கள்

காக்னிசென்ட் நிறுவனம் ESG மெபிலிட்டி நிறுவனத்தைக் கைப்பற்றியதன் வாயிலாக உலகின் டாப் 10 OEM நிறுவனங்களில் 8 நிறுவனங்களுக்குச் சேவை அளிக்க உள்ளது. இதன் காக்னிசென்ட் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் சேவை பிரிவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியாக உள்ளது. இதன் மூலம் இனி வரும் காலகட்டத்தில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த வர்த்தகத்தையும் அதிகளவில் காக்னிசென்ட் பெறத் திட்டமிட்டுள்ளது.

ஒப்பந்தம் உறுதியானது

ஒப்பந்தம் உறுதியானது

ESG நிறுவனத்தைக் கைப்பற்ற இருதரப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த இணைப்பு 2021ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் முடியும் எனவும், இந்தக் கைப்பற்றல் குறித்து நிதியியல் தகவல்களைக் காக்னிசென்ட் வெளியிடவில்லை.

நிறுவன கைப்பற்றல்

நிறுவன கைப்பற்றல்

காக்னிசென்ட் நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என முக்கியமான இலக்குடன் கிளவுட், டேட்டா, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் இன்ஜினியரிங், இன்டர்நெட் ஆப் திங்ஸ் பிரிவில் நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.

13 நிறுவனங்கள் கைப்பற்றல்

13 நிறுவனங்கள் கைப்பற்றல்

இதன் படி 2021ஆம் ஆண்டில் மட்டும் ESG மெபிலிட்டி நிறுவனத்தோடு சேர்ந்து சுமார் 4 நிறுவனங்களையும், ஜனவரி 2020 முதல் சுமார் 13 நிறுவனங்களைக் காக்னிசென்ட் கைப்பற்றி அதிரடி காட்டியுள்ளது. சிடிஎஸ்-ன் இந்த அதிரடி நடவடிக்கை சக ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+