ஐடி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் நிறுவனம், அமெரிக்காவினை தளமாகக் கொண்டாலும், அதன் ஊழியர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் தான்.
இதனால் அந்த நிறுவனத்தில் என்ன நடந்தாலும், அது இந்தியர்களுக்கே பெரும்பாலும் தாக்கத்தினை ஏற்படுத்தும். அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி.
அந்த வகையில் தற்போது காக்னிசண்ட் நிறுவனம், அதன் டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்தும் வகையில் இரு டிஜிட்டல் நிறுவனங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

காக்னிசண்டின் திட்டம்
குறிப்பாக இந்த நிறுவனங்கள் டேட்டா அனலிஸ்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சேவைகள், டிசைன், கிளவுட் சேவை உள்ளிட்ட பல சேவைகளை மேற்கண்ட இரு நிறுவனங்களும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதில் ஒன்று நியூயார்க்கினை தளமாகக் கொண்ட லித்தியம் நிறுவனம். மற்றொன்று கிளவுட் சேவையினை அடிப்படையாக கொண்ட ServiceNow என்ற நிறுவனத்தினையும் வாங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

எவ்வளவு முதலீடு?
இந்த நிறுவனங்களின் கையகப்படுத்தல் இந்த காலாண்டிற்குள் முடிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான நிதி விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், 500க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை வல்லுனர்கள், முதன்மையாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை மையமாகக் கொண்ட காக்ணிசன்ட்டில் சேருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகத்தினை மேம்படுத்தலாம்
மேலும் இந்த இணைப்புக்கு பிறகு இந்த பிராந்தியத்தில் காக்னிசண்டின் கிளவுட் மற்றும் தரவு குழுவை இரட்டிப்பாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் வளர்ச்சியினை மேம்படுத்தும் கட்டத்தில் உள்ளன. இதனால் காக்னிசண்டின் வளர்ச்சி மேம்படும் என்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேன் லிவ்சே கூறியுள்ளார்.

பல கையகப்படுத்தல்கள்
சேர்வியன் என்பது கடந்த ஆண்டு ஜனவரி முதல் காக்னிசண்டின் 10 வது டிஜிட்டல் மையப்படுத்தப்பட்ட கையகப்படுத்தல் ஆகும். அதே நேரத்தில் லினியம், காக்னிசண்டின் ஏழாவது கிளவுட் தொடர்பான கையகப்படுத்தல் ஆகும். கடந்த 12 மாதங்களில் காக்னிசண்ட் நிறுவனம் சுமார் 1.4 பில்லியன் டாலர் கையகப்படுத்தல்களில் முதலீடு செய்துள்ளது. உண்மையில் இதனால் வேலை வாய்ப்புகளும் பெருகும். இந்தியர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் நல்ல விஷயம் தானே.