முன்னணி IT சேவை நிறுவனமான காக்னிசன்ட் இந்த ஆண்டு 20,000 பிரெஷர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும். பணியமர்த்தல் தொடர்பாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரவிக்குமார் கூறுகையில், இந்த ஆண்டு 20,000 பிரெஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், புதிய பணியமர்த்தல் மூலம் நிறுவனம் தன் திறமையை மீட்டெடுத்து சேவை மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிரிவை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறது", என்றும் கூறியுள்ளார்.
தற்போது 3 முக்கிய பகுதிகளில் காக்னிசன்ட் கவனம் செலுத்தி வருகிறது. முதலாவதாக பணியமர்த்தல் செயல்முறை, இரண்டாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் செலவுகளைத் திறம்பட நிர்வகிப்பது.

20000 பிரஷர்களை பணியமர்த்துவது குறித்து காக்னிசன்ட் சிஇஓ ரவிக்குமார் கூறியது என்ன?: காக்னிசன்ட் சிஇஓ தற்போது நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையான திட்டங்களில் வேகமாக செயல்பட்டு வருவதாகவும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை குறையாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். நிறுவனத்தில் மேனேஜ்டு சர்வீசஸ் பெரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொடர்ந்து புது திட்டங்களில் பணியாற்ற ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். அதற்காகத்தான் இந்த புதிய பணியமர்த்தல் என்றும் கூறினார்.
காக்னிசன்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் தினத்தன்று பேசிய ரவிக்குமார், பணியமர்த்தல் செயல்முறை குறித்து அறிவித்தார். முதலீட்டாளர் தினம் என்பது ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், ஆய்வாளர்கள், நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் ஆகியோருடன் எதிர்காலத் திட்டங்கள், நிறுவனத்தின் நிதிநிலை எப்படி இருக்கிறது? வளர்ச்சி உத்திகள் போன்ற அனைத்தையும் கலந்தாலோசிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு.
அதன் போது தான் 20,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவது குறித்து ரவிக்குமார் கூறினார். எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நிறுவனத்தின் வளர்ச்சியை நிலை நிறுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே காக்னிசன்ட் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 1400-க்கும் மேற்பட்ட ஜெனரேட்டிவ் AI பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. ஜெனரேட்டிவ் AI என்பது கன்டென்ட், இமேஜ், வீடியோ போன்றவற்றை உருவாக்கும் திறன் கொண்ட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம். கூடுதலாக 2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 7.45 சதவீதம் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications