Cognizant நிறுவனத்தில் என்ன நடக்குது..? இந்தியரை நியமித்த நேரம், தலைகீழாக மாறியது..!

இந்திய ஐடி சேவை துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சிடிஎஸ் எனப்படும காக்னிசன்ட் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. காக்னிசன்ட் 1994 ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டாலும் பின்னாளில் அமெரிக்காவுக்கு தனது தலைமையகத்தை மாற்றியது. ஆனாலும் இந்தியாவில் தான் 70 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது.

Cognizant நிறுவனம் வேகமாக வளர்ந்து வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு முதல் வர்த்தகம், நிர்வாகம் என அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார் ரவிக்குமார்.

Cognizant நிறுவனத்தில் என்ன நடக்குது..? இந்தியரை நியமித்த நேரம், தலைகீழாக மாறியது..!

ரவிக்குமார் இன்போசிஸ் நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறிய முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார். காக்னிசன்ட் நிறுவனத்திற்கு வந்த சில நாட்களிலேயே சிஇஓ பதவி பெற்று தனது ஸ்டைலில் நிர்வாக குழுவை மாற்றி அமைத்தார். இந்த மாற்றத்தை விரும்பாத பலர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

ரவிக்குமார் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு பெற்றதை தொடர்ந்து, இப்பதவியில் முன்பு இருந்த பிரையன் ஹம்ப்ரிஸ் வெளியேறியுள்ளனர். இவரை தொடர்ந்து சமீபத்தில் உலக வளர்ச்சி சந்தைகளுக்கான காக்னிசண்ட் தலைவர் ராப் வாக்கர் வெளியேறினார்.

ராப் வாக்கர் 2021 ஆம் ஆண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தின் UK மற்றும் அயர்லாந்து வணிகத்தின் நிர்வாக தலைவராக சேர்ந்தார், ஆனால் கடந்த 2 வருடத்தில் அமெரிக்க வர்த்தகத்தை தவிர அனைத்து சந்தைகளின் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். இவருடைய வளர்ச்சி பலருக்கு வியப்பு அளிக்கும் வேளையில் இவருடைய ராஜினாமா பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ராப் வாக்கர்-ஐ தொடர்ந்து உத்தி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக துணை தலைவராக இருந்த அனில் செரியன் சமீபத்தில் வெளியேறியவர்களில் மிகவும் முக்கியமானவர். அனில் செரியன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதியின் தொழில்நுட்ப மாற்ற சேவை பிரிவின் பொறுப்பில் இருந்தார்.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தலைமை மக்கள் அதிகாரியாக இருந்த பெக்கி ஷ்மிட், நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து காக்னிசன்ட்-ன் chief administrative officer ஆக இருந்த லாரன்ஸ் வைசர் வெறும் மூன்று வருட பணிக்குப் பிறகு ராஜினாமா செய்தனர். குளோபல் டெலிவரி தலைவராக இருந்த Andy Stafford தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பிரையன் ஹம்ப்ரிஸ் வெளியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு கீழ் பணியாற்றிய பெரும்பாலானோர் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினர். இவருடைய நிர்வாக காலத்தில் பல முக்கிய அதிகாரிகளை, முக்கிய துறையில் அனுபவம் வாய்ந்தவர்களை காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்த்தார். தற்போது இதில் பெரும்பாலானவர்கள் வெளியேறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+