அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசன்ட் உயர் நிர்வாக பதவிகளில் இந்தியர்களையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை அடுத்தடுத்து நியமிப்பதன் மூலம் மீண்டும் இந்திய மயமாகிறது.
சென்னையில் துவங்கப்பட்ட காக்னிசென்ட், அமெரிக்காவுக்கு தலைமையகத்தை மாற்றிய பின்பு நீண்ட காலமாக உயர் மட்ட அதிகாரத்தில் இந்தியர்கள் தான் அதிகமாக இருந்தனர். ஆனால் கடந்த சில வருடத்தில் வேகமான வளர்ச்சிக்கும், வெளிநாடுகளில் அதிகம் வளர்ச்சி அடையவும் அதிகப்படியாக வெளிநாட்டவர்களை நியமித்தனர்.

ஆனால் இது பெரிய அளவில் பலன் அளிக்காத நிலையில் Cognizant நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பதவி காலம் முடிய முடிய இந்தியர்களை நியமிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரவிக்குமார்-ஐ தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற போது இதற்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
இந்த ஒரு தலைமை மாற்றம் மூலம் இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ-வில் இருந்து பல முக்கிய நபர்களை முக்கிய பதவிகளில் அடுத்தடுத்து இந்தியர்களாக நியமிக்கும் பணிகள் வெற்றிகரமாக துவங்கியது.
இதில் சமீபத்திய நியமனம் காக்னிசென்ட் நிறுவனத்தின் புதிய சிஎஃப்ஓ-வாகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் விப்ரோ CFO அதிகாரியான ஜதின் தலால் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம் மூலம் மூத்த பணியாளர்களின் நியமனத்தில் புதிய புத்துணர்ச்சியை கொடுத்தது.
இன்போசிஸ்-ன் முன்னாள் EVP மற்றும் கிளவுட் தலைவரான நரசிம்ம ராவ் மன்னேபள்ளி, உலகளாவிய டெலிவரி தலைவராக காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர உள்ளதாகக் கூறப்படுகிறது. காக்னிசென்ட்-ன் முன்னாள் EVP மற்றும் உலகளாவிய விநியோகத் தலைவரான ஆண்டி ஸ்டாஃபோர்ட் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
இவரோடு இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையின் மூத்த துணைத் தலைவராக இருந்த நாகேஸ்வர் செருகுபள்ளி விரைவில் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் விப்ரோ நிறுனத்தின் உயர் துணை தலைவர் மற்றும் விப்ரோவின் அமெரிக்க ஹெல்த்கேர் மற்றும் மருத்துவ சாதனங்களின் தலைவரான முகமட் ஹக், காக்னிசண்டில் லைஃப் சயின்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காக்னிசென்ட் கடந்த 5 வருடத்தில் இழந்த வேகத்தை மீண்டும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்போசிஸ், விப்ரோ நிறுவனத்தில் இருந்து மூத்த அதிகாரிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது.
காக்னிசென்ட் நிறுவனத்தில் தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பாக இருந்த அஜ்மல் நூரானி, இப்போது தொழில்நுட்பப் பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய இடத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் 30 வருடம் அனுபவமுள்ள அனுராக் வர்தன் சின்ஹா தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தின் உயர் துணை தலைவர்மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ஊடக நடைமுறைகளின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications