சென்னையில் துவங்கப்பட்டு, அமெரிக்காவின் நாஸ்டாக் பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்ட் நிறுவனம், சமூக வலைத்தள கணக்குகளில் சமீபத்தில் தனது பிராண்ட் பெயருக்கு முன் "புதுமை (innovate)" என்ற சொல்லை சேர்த்துள்ளது.
இந்த புதிய மாற்றத்தைக் கண்டு காக்னிசென்ட் நிறுவனத்தின் பிரஷ்ஷர்ஸ் ஊழியர்கள் முதல் மூத்த அதிகாரிகள் வரையில் அதிர்ச்சி அடைந்தனர். நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்தது. உண்மையில் என்ன நடந்தது..? சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கும் காக்னிசென்ட் ஊழியர்களின் பதற்றத்திற்கு முக்கியமான காரணமாகும்.

காக்னிசென்ட் innovate என்ற சொல்லை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் தவிர அனைத்து இடத்திலும் மாற்றியுள்ளது. வேலை வாய்ப்பு பதிவுகள், லின்கிடுஇன் கணக்குகள் என அனைத்திலும் மாற்றப்பட்டது. இதனால் காக்னிசன்ட் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களின் சுயவிவரங்களிலும் கூட இந்த மாற்றம் எதிரொலித்தது.
உண்மையில் காக்னிசென்ட் தனது பிராண்ட் பெயரையும், நிறுவனத்தின் முக்கியமான சாதனையை விளம்பரப்படுத்தக் கையாண்ட விசித்திரமான ஐடியா இது. இந்த மாற்றம் குறித்து டைம்ஸ் பத்திரிக்கைக்கு காக்னிசன்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், "எங்களுடைய' புளூபோல்ட் (Bluebolt)' இன்னோவேஷன் முயற்சியின் ஒரு வருடம் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், சமூக வலைத்தளங்களில் தற்காலிகமாக 'innovate' என்ற பெயரை பயன்படுத்தினோம். இது காக்னிசன்ட் நிறுவனத்தின் கலாச்சாரத்திலும், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 200,000 புதுமையான யோசனைகளை உருவாக்குவதற்கான எங்கள் இலக்கிலும் இன்னோவேஷன் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இது காட்டுகிறது." என்று கூறினார் காக்னிசென்ட் செய்தித் தொடர்பாளர்.
மேலும், உலக இன்னோவேஷன் தினத்தன்று இந்த விளம்பரத்தை காக்னிசன்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது என்றும் மே மாதம் வரை இது நீடிக்கும் என்றும் காக்னிசென்ட் செய்தித் தொடர்பாளர் விளக்கம் கொடுத்தார்.
இதற்கிடையில், காக்னிசென்ட் எதிராக தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. காக்னிசன்ட் நிறுவனத்தின் லோகோ தொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றம் நிறுவனத்திற்குத் தடை விதித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட அத்யாதி டெக்னாலஜிஸ் (Atyati Technologies) என்ற நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்யாதி டெக்னாலஜிஸ் நிறுவனம், காக்னிசன்ட் நிறுவனத்தின் லோகோ தங்களது லோகோவை மிகவும் ஒத்துள்ளது என்றும், இது அவர்களின் வர்த்தக டிரேட்மார்க் உரிமையை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. அத்யாதி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் லோகோ ஆரஞ்சு நிற hexogonal தேன் கூடு (hexagonal honeycomb) ஆகவும், காக்னிசன்ட் நிறுவனத்தின் லோகோ நீல நிற 3D கன சதுரம் (3D cube) ஆகவும் இருக்கும்.
இந்த வழக்கு குறித்து காக்னிசன்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: "விசாரணை நிலையில் உள்ள விஷயங்கள் (sub-judice matters) குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை. காக்னிசன்ட் நிறுவனம் மூன்றாம் தரப்பு அறிவுசார் சொத்துரிமைகளை (third-party intellectual properties) மதிக்கிறது. அதே நேரத்தில், தனது சொந்த வியாபார நலன்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை (IPs) பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. காக்னிசென்ட் நிர்வாகம் தேவைப்படும் போது தகுந்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நிறுவனம் எடுக்கும்." என தெரிவித்தார்.
இந்த வழக்கைத் தொடர்ந்து காக்னிசென்ட் இந்தியாவில் காக்னிசென்ட் லோகோ-வை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளது. சமுக வலைத்தள பக்கம் மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திலும் லோகோ நீக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications