நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் இருக்கும் வேலைகளே இருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. இந்த நிலையில் சில ஐடி நிறுவனங்கள் உள்பட சில நிறுவனங்கள் சம்பள உயர்வுடன் ஊதியத்தினை வழங்கியுள்ளன.
இன்னும் சில நிறுவனங்கள் அதற்கும் மேல் பணி உயர்வும் கொடுத்துள்ளன.
போகிற போக்கினை பார்த்தால் இருக்கும் வேலையே இருக்குமா? இருக்காத என்பதே இங்கு பலரின் கேள்வியாக இருக்கும் போது, இப்படி ஒரு அசாதாரண நேரத்திலும் கூட சில நிறுவனங்கள் ஊதிய உயர்வுடன் சம்பளத்தினை கொடுத்திருப்பது ஊழியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் என்று தான் கூற வேண்டும்.
யரெல்லாம் சம்பள உயர்வு
இந்த வகையில் இன்று காலையிலேயே ஒரு கட்டுரையில் பார்த்தோம், பிரான்சின் கேப்ஜெமினி, அடுத்ததாக அமெரிக்காவின் காக்னிசண்ட் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான பாரத்பே இப்படி சில நிறுவனங்கள் தான் இந்த அசாதாரண நிலையிலும் கூட ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை வாரி வழங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் அண்டை நாடுகளை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, கணிசமான அளவு இந்திய ஊழியர்கள் உள்ளனர்.
எவ்வளவு பேருக்கு சம்பள உயர்வு?
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான கேப்ஜெமினி அதன் ஊழியர்களின் 70% பேருக்கு சம்பள உயர்வினை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக இதன் மூலம் இதன் இந்தியா பணியாளர்கள் சுமார் 1.5 லட்சம் ஊழியர்களுக்கு, ஏப்ரல் மாதத்தில், ஒற்றை இலக்கில் உயர்வை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊதிய குறைப்பு இல்லை
இது குறித்து கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் யார்டி, நாங்கள் எந்த ஊழியர்களுக்கும் சம்பள குறைப்பு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏ மற்றும் பி தர ஊழியர்களுக்கும் (சுமார் 84,000 பேர்) ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
பாரத்பே நிறுவனம் சம்பள உயர்வு
டிஜிட்டல் பேமென்ட் ஸ்டார்டப் நிறுவனமான பாரத்பே நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வினை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே அமெரிக்காவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான காக்ணிசன்ட் நிறுவனம், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 25% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. காக்ணிசன்ட் நிறுவனத்தில் அதிகளவு இந்திய ஊழியர்களே பனி புரிவதால், இதன் பலன் இந்திய ஊழியர்களுக்கு அதிகளவில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications