தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முன்னணி நகரங்களில் கோயம்புத்தூர் முதன்மையாக இருக்கும் வேளையில் இந்நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை முக்கிய வர்த்தகமாக கொண்டு இயங்கும் வேளையில் கடந்த 5 வருடத்தில் சேவை துறையை முக்கியமானதாக கொண்டு இயங்கி வருகிறது. இதனால் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் அடுத்தடுத்து அலுவலகத்தை திறந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று கோயம்புத்தூரில் விரைவில் திறக்கப்படும் 2வது IT பார்க், புதிதாக 2 அமெரிக்க நிறுவனம் என்ட்ரி கொடுத்துள்ள செய்தி இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரில் ஏற்கனவே இருக்கும் ஐடி பார்க்-கை சுற்றியுள்ள பகுதியை மேம்படுத்த புதிய டென்டர் வெளியிடப்பட்டது, இந்த நிலையில் 2வது ஐடி பார்க் திறக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூரில் 2வது IT பார்க் வருகிற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது, இதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் 2வது IT பார்க் 2.66 லட்சம் சதுரடியில் சுமார் 114.16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு உள்ளது, இது வருகிற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.
இது மட்டும் அல்லாமல் தமிழ்நாடு அரசு சென்னை, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் 6.15 லட்சம் சதுரடியில் IT பார்க் அதாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ELCOT அதாவது எலக்ட்ரானிக் கார்ப்ரேஷன் ஆப் தமிழ்நாடு நிறுவனம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 1,288 ஏக்கரில் புதிய தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட உள்ளது.

கோயும்புத்தூர்-ஐ சேர்ந்த ஜி2 டெக்சாப்ட் மற்றும் CG-VAK சாப்ட்வேர் & எக்ஸ்போர்ட்ஸ் ஆகியவை துடியலூர் அமைத்துள்ள GN மில்ஸ் அருகில் இருக்கும் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஐடி டெக் பார்க்-ல் தனது அலுவலகத்தை திறந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் அலுவலகத்தை வைத்துள்ளது.
லண்டன்-ஐ சேர்ந்த EY என்ற பிரபலமாக அறியப்படும் Ernst & Young கோயம்புத்தூரில் புதிய அலுவலகத்தை திறக்க உள்ளது. EY தனது அலுவலகத்தை IndiQube Echo வளாகத்தில் திறக்க முடிவு செய்துள்ளது, இந்த நிறுவனம் ஏன் ரொம்ப ஸ்பெஷல் உலகின் BIG 4 எனப்படும் 4 நிறுனங்களில் Ernst & Young ஒன்று. விரைவில் KPMG, PWC ஆகிய நிறுவனங்களும் தனது அலுவலகத்தை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications