தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் 2ஆம் தர நகரங்கள் பட்டியலில் கோயம்புத்தூர் முதன்மையாக இருப்பது மட்டும் அல்லாமல் ஐடி நிறுவனங்களையும், ஐடி முதலீடுகளையும் ஈர்ப்பதிலும் கோவை முன்னோடியாக இருக்கிறது.
கோயம்புத்தூர் நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அடுத்தடுத்து அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. கோவையில் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையின் வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் இந்நகரத்தில் சுமார் 7 ஐடி பார்க்குகள் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதன் மூலம் கோவை நகரத்தில் மட்டும் சுமார் 34.37 லட்சம் சதுரடி பரப்பளவிலான ஐடி அலுவலக இடங்கள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகப்படியான ஐடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் அக்சென்சர், இன்போசிஸ் கோவையில் புதிய அலுவலகத்தை திறக்க உள்ளது.
Accenture: தமிழ்நாடு அரசின் ELCOT ஐடி பார்க் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் அக்சென்சர் சுமார் 3 தளங்களில் மெகா அலுவலகத்தை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Infosys: இதேபோல் கோயம்புத்தூரில் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள SVB டெக் பார்க்கில் சுமார் 5 தளத்தில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது அலுவலகத்தை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடி உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் ELCOT கோயம்புத்தூரில் புதிய மற்றும் அதிநவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஐடி டவர் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூரில் 2வது IT பார்க் திறப்பதற்கு தயாராக உள்ளது, இது சுமார் 2.66 லட்சம் சதுரடியில் சுமார் 114.16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இதேவேளையில் வேளையில் ELCOT 3வதாக மாபெரும் ஐடி பார்க் கட்டும் திட்டத்தை முன்வைத்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
புதிய ஐடி டவர் கோயம்புத்தூர் ELCOT PARK-ல் சுமார் 1 மில்லியன் சதுரடி அதாவது 10 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு சென்னை, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் 6.15 லட்சம் சதுரடியில் IT பார்க் அதாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ELCOT அதாவது எலக்ட்ரானிக் கார்ப்ரேஷன் ஆப் தமிழ்நாடு நிறுவனம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 1,288 ஏக்கரில் புதிய தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications