கோயம்புத்தூர்: கொங்கு மண்டலத்தின் தலைநகரமாகக் கருதப்படும் கோயம்புத்தூர் கடந்த 10 வருடத்தில் வெறும் உற்பத்தி துறையை மட்டுமே நம்பி, தனது பொருளாதார சக்கரத்தைச் சுழற்றும் நிலையை மாற்றியுள்ளது. லாக்டவுன்-க்கு பின்பு எப்போதும் இல்லாமல் அதிகப்படியான டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளது. இதோடு பிரபலமான ஐடி சேவை நிறுவனங்களும் தனது அலுவலகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது.
இப்படி, கோயம்புத்தூரில் தற்போது நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் கோயம்புத்தூரில் தனது 2வது அலுவலகத்தை அமைத்துள்ளது. டெக் துறையில் அதிகப்படியான திறன் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டிருக்கும் கோயம்புத்தூரில் டெக் நிறுவனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்து வருகிறது, பெரிய IT நிறுவனங்களின் செயல்பாடுகளை அமைக்க பெஸ்ட் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

இந்த நிலையில் தற்போது கோயம்புத்தூரில் அக்சென்சர், EY மற்றும் ஆம்பர் குரூப் ஆகியவற்றின் புதிய அலுவலக திறப்பு குறித்த செய்திகள், கோவை டெக் ஊழியர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
அக்சென்ச்சரின் விரிவாக்கம்: உலகளாவிய IT சேவை நிறுவனமான அக்சென்சர், கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான KGISL SEZ டெக் பார்க்-ல் தனது இரண்டாவது அலுவலகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் சுமார் 750 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூரில் தனது இருப்பை விரிவுபடுத்தவும், இப்பகுதியில் இருக்கும் திறன் வாய்ந்த ஊழியர்களைப் பயன்படுத்தும் சக போட்டி நிறுவனங்களின் மாடலை பின்பற்றுகிறது அக்சென்சர். இன்போசிஸ், டிசிஎஸ், ஆகியவை அடுத்தடுத்து தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், அக்சென்சர் மிகவும் தாமதமாகவே தனது விரிவாக்க பணிகளை மேற்கொண்டு உள்ளது.
EY இன் புதிய கோயம்புத்தூர் அலுவலகம்: எர்ன்ஸ்ட் & யங் (EY) தனது உலகளாவிய டெலிவரி சேவைகளை மேம்படுத்தவும், அதிகரிக்கும் வாடிக்கையாளர்களுக்குத் திறம்படச் சேவையை அளிக்கவும் கோயம்புத்தூரில் புதிய அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது. எர்ன்ஸ்ட் & யங் (EY) போன்ற முன்னணி நிறுவனங்கள் கோயம்புத்தூரில் அலுவலகத்தைத் திறப்பது கோயம்புத்தூரில் செழித்து வரும் டெக் மற்றும் கார்ப்ரேட் எகோசிஸ்டத்திற்கு வலு சேர்க்கும்.
ஆம்பர் குரூப்பின் புதிய கோயம்புத்தூர் அலுவலகம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை நிறுவனமான ஆம்பர் குரூப், கோயம்புத்தூரில் புதிய அலுவலகத்தை நிறுவ உள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி கோயம்புத்தூரில் அடுத்தடுத்து ஐடி சேவை நிறுவனங்கள் திறக்கப்படும் வேளையில், அலுவலகத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஒருப்பக்கம் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் டெக் பார்க்-கிற்குள் நுழையும் வேளையில், சிறிய நிறுவனங்கள் அனைத்தும் கோ வொர்கிங் ஸ்பேஸ் பக்கம் செல்ல தயாராகி வருகிறது.
இப்படி இரு பிரிவின் அலுவலக இட தேவையை பூர்த்தி செய்ய நகரம் முழுவதும் ஐடி பார்க் கட்டுமானங்கள் சூடுபிடித்துள்ளது மட்டும் அல்லாமல் கோவையின் பிராதான இடங்கள் அனைத்திலும் புதிய அலுவலக இடங்களுக்கான கட்டுமான திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளது. சும்மாவா சொன்னாங்க கோயம்புத்தூர் தான் அடுத்த பெங்களூர் என்று.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications