சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியமான நகரங்களில் கோயம்புத்தூர் அதிமுக்கியமானது. இதற்கு முக்கியமான காரணம் உற்பத்தி துறை அடிப்படை பொருளாதார கட்டமைப்பாக உருவான கோயம்புத்தூர் கடந்த 6 வருடத்தில் சென்னை, பெங்களூர்க்கு அடுத்தபடியாக டெக் நிறுவனங்களுக்கு விருப்பமான இடமாக மாறி வருகிறது.
உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் கோயம்புத்தூரில் அலுவலகத்தைத் திறந்து வருவதால் அலுவலக ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இந்த டிமாண்ட்-க்கு ஏற்ற சப்ளை இல்லாத காரணத்தால் கோயம்புத்தூர் மாநகரம் முழுவதிலும் பல இடத்தில் புதிய ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதித்யா டெக் பார்க் என்ற ஐடி பூங்கா-வின் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட உள்ளது.
சரவணம்பட்டி என்ற கோயம்புத்தூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள அதித்யா டெக் பார்க், நவீன அலுவலக வசதிகள் மற்றும் அதிநவீன கட்டமைப்புகளுடன் கூடிய அலுவலக இடங்களை உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளது. இதன் மூலம் முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் இந்த பூங்காவில் விரைவில் அலுவலகத்தைத் திறக்க உள்ளது.
ஏன் ஐடி நிறுவனங்கள் மற்றும் குளோபல் சேவை மையங்கள் (Global Capability Centers - GCCs) கோயம்புத்தூரில் கிளைகளைத் திறக்கின்றன? கோயம்புத்தூர் நகரத்திற்கு இதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
கோயம்புத்தூர், பாரம்பரிய தொழில்துறை மையமாக அறியப்பட்டாலும், சமீப காலங்களில் ஐடி துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
திறமையான பணியாளர்கள்: கோயம்புத்தூரில் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் சிறந்து வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகப்படியாக உள்ளன. இதன் காரணமாக, நன்கு தகுதி பெற்ற மற்றும் குறைவான சம்பளத்தில் பெறக்கூடிய பணியாளர் கோயம்புத்தூரில் கிடைக்கும் காரணத்தால் அடுத்தடுத்து உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அலுவலகத்தைத் திறக்கிறது.
குறைந்த செலவு: சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது, கோயம்புத்தூரில் அலுவலக ரியல் எஸ்டேட் விலை, வீட்டு வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவாக உள்ளன. இது நிறுவனங்களுக்குச் செலவு குறைப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
நல்ல உள்கட்டமைப்பு: கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே இணைப்பு போன்ற சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது. இது நிறுவனங்களுக்குச் சிறந்த இணைப்பை வழங்குகிறது.
அரசு ஆதரவு: தமிழ்நாடு அரசு ஐடி துறையை ஊக்குவிப்பதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், மானியங்கள், வரி சலுகைகள் மற்றும் நிலம் ஒதுக்கீடு போன்ற சலுகைகள் அடங்கும்.
கோயம்புத்தூரில் புதிய ஐடி பூங்காக்கள் போன்ற திட்டங்கள், மேலும் பல ஐடி நிறுவனங்கள் மற்றும் GCCக்களை இந்த நகரத்திற்கு வர ஊக்குவிக்கும். இதன் விளைவாக, வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கோயம்புத்தூரின் வாழ்க்கைத் தரம் மேம்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.
சரவணம்பட்டி அதித்யா டெக் பார்க் தொடர்ந்து இந்தியா லேண்டு, கேபிஆர், எஸ்விபி, எல்காட், எல் அண்ட் டி, wynfra cybercity, கேசிடி, ரத்தினம் டெக் சோன், டைடல் நியோ ராக்கிப்பாளயம் ஆகிய பல டெக் பார்க்குகள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டத்தில் உள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications