கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையமாக மாறி வருகிறது, குறிப்பாக மத்திய தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளை இணைக்கும் முக்கிய முணையமாக வளர்ந்து வருகிறது. கடந்த 5 வருடத்தில் கோயம்புத்தூரில் இருந்து கோயம்புத்தூரில் இருந்து பல நாடுகளுக்கு நேரடி சேவையை துவங்கப்பட்டு உள்ளது. இதற்கு மக்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
2024ல் மட்டும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். 2025இல் 35 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கோவை விமான நிலையத்தின் பயணிகள் தற்போதைய திறன் 20 லட்சம் மட்டுமே என்பதால், விமான சேவை விரிவாக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளது.

இதனாலேயே கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பல நேரம் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார் வந்துக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் விமான நிலைய ஆணையம் (AAI) புதிய இன்டிகிரேட்டட் டெர்மினல் கட்டுமானத்திற்கான கன்சல்டென்சி சேவை வழங்க விருப்பமுள்ள நிறுவனங்களை ஏலத்தில் பங்கேற்க அழைத்துள்ளதாக சென்னை அப்டேட்ஸ் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் முதல் முக்கிய படியாகும்.
புதிய டெர்மினல்:
புதிய இன்டிகிரேட்டட் டெர்மினல் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும், இது தற்போதைய 18,000 சதுர மீட்டர் டெர்மினலின் நான்கு மடங்கு பெரியது. இந்த விரிவாக்கம் மூலம் கோவை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 12 மில்லியன் பயணிகளை (1.2 கோடி) கையாளும் திறன் கொண்டதாக மாறும்.
இந்த விரிவாக்கம் கோயம்புத்தூர் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும். இந்த விரிவாக்கத்தில் 8 ஏரோபிரிஜ்கள், கோட் E மற்றும் கோட் C விமானங்களுக்கான 7/14 அப்ரான்கள், ஐசோலேஷன் பே ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இவை விமானங்கள் விரைவான டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் சேவை கிடைக்கும்.

உள்கட்டமைப்பு மேம்பாடுகள்:
இதோடு டெர்மினலுக்கு elevated approach road கட்டப்படும், இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும். மல்டி லெவல் கார் பார்க்கிங் 1600 வாகனங்களுக்கு, 300 வாகனங்களுக்கு சர்பேஸ் பார்க்கிங், பஸ் டெர்மினல் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
இவை அனைத்தும் பயணிகளின் வசதியை அதிகரிக்கும். இதோடு பார்லெல் டாக்ஸிவே அமைக்கப்பட உள்ளது, இது விமானங்கள் ரன்வேவை சுற்றி வேகமாக நகர உதவும்.
கோயம்புத்தூர் விமான நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய விமான நிலையமாக உள்ளது. இந்த விரிவாக்கம் புதிய விமானங்கள், சர்வதேச இணைப்புகளை அதிகரிக்கும். தொழில் மற்றும் சுற்றுலா துறைகளுக்கு பெரும் பயன் அளிக்கும் வரையில் இருக்கும்.
தற்போது கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான 627 ஏக்கரில் 605 ஏக்கர் நிலம் அரசு வழங்கியுள்ளது, மீதம் சர்வே நடத்தப்பட்டு வருகிறது. 16 கி.மீ. சுற்றுப்புற சுவர் கட்டும் திட்டம் 2026 செப்டம்பர் முடியும். இது கோயம்புத்தூர் பொருளாதாரத்திற்கு கட்டாயம் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications