கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார மண்டலமாக இருக்கும் கோயம்புத்தூர் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முதலீட்டில் இருந்து வேலைவாய்ப்பு , வர்த்தகம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் டிமாண்ட், மக்கள் தொகை எண்ணிக்கை வரையில் பல முனைகளில் கோவை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்கான நிலம் கையகப்படுத்துதல் நீண்ட காலமாக இழுபறி நடந்து வரும் நிலையில், வருவாய்த் துறை நீதிமன்றம் வழியாக மீதமுள்ள நிலத்தைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த வேளையில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளின் ஒருபகுதியாக உருவாகும் புதிய ஒருங்கிணைந்த முனையம் எப்படியிருக்கும் என மாதிரி வடிவத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த 5 வருடத்தில் உற்பத்தி நிறுவனங்களுக்கு இணையாக ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கும் காரணத்தால், இனி வரும் காலத்தில் வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும், இதேபோல் வெளிநாட்டவர்களின் வருகை எண்ணிக்கையும் அதிகரிக்கும், இவை இரண்டுக்கும் ஏற்ப புதிய ஒருங்கிணைந்த முனையம் பிரம்மாண்டமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த முனையம் எப்படியிருக்கும் என்பதற்கான மாதிரி வடிவத்தின் புகைப்படம் மக்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வரும் வேளையில், இந்த முனையம் கோயம்புத்தூர் விமான நிலையத்தைச் சர்வதேச அளவுக்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நிலம் கையகப்படுத்துதல் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில், இன்னும் நான்கு ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும், பல்வேறு காரணங்களால் மீதமுள்ள நிலம் கையகப்படுத்துதல் தாமதமானதால், தமிழ்நாடு தொழில்துறை நோக்கத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 7(3) பிரிவு கீழ் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நான்கு ஏக்கர் நிலத்திற்கான இழப்பீட்டை விரைவில் 7(3) பிரிவு கீழ் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நீதிமன்றத்தின் வாயிலாகச் செலுத்தி அளிக்கப்படும், இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு அரசு கோவை விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காகக் கையகப்படுத்துதலுக்கு நிர்வாக அனுமதி அளித்த 635.33 ஏக்கரில், 468.83 ஏக்கர் பட்டா நிலம், 28.37 ஏக்கர் புறம்போக்கு நிலம், 134.32 ஏக்கர் பாதுகாப்புத் துறையின் நிலம் மற்றும் 3.30 ஏக்கர் நிலம் பிற அரசுத் துறை நிலம் சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, நீலாம்பூர் மற்றும் இருகூர் கிராமங்களில் உள்ளன.
வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுவது போல், 468.83 ஏக்கர் பட்டா நிலத்தில், நான்கு ஏக்கர் தனியார் நிலம் மற்றும் சுமார் 10 ஏக்கர் அளவிலான சாலை அமைந்திருக்கும் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அரசுக்கு 'நோ காஸ்ட் நிலத்திற்கு' (சாலை அமைந்திருக்கும் நிலம்) இழப்பீடு செலுத்த வேண்டியதில்லை என்பதால், நான்கு ஏக்கருக்கு மட்டுமே 7(3) பிரிவு கீழ் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
மீதமுள்ள பட்டா நிலங்கள் சட்டத்தின் 7(2) பிரிவு கீழ் குடியிருப்பு பகுதிகளுக்கு சதுரடிக்கு ரூ. 1,500 மற்றும் விவசாய நிலங்களுக்கு சதுரடிக்கு ரூ. 900 என்ற நிலையான இழப்பீடு வழங்கி கையகப்படுத்தப்பட்டுள்ளன.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications