தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. முன்னனி ஐடி நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள், உற்பத்தி ஆலைகள் ஆகியவை கோவை , மதுரை உள்ளிட்ட நகரங்களில் அதிகரித்து வருகின்றன.
வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் உற்பத்தி பெருகுவதால் இந்த நகரங்களில் மக்கள் தொகையும் பெருகி வருகிறது. எனவே சென்னையை போலவே இந்த நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி கோரி கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் மத்திய அரசு இந்த இரண்டு திட்டங்களையும் நிராகரித்து அறிக்கைகளை திருப்பி அனுப்பியது.
20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் என்ற காரணத்தினால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் எப்படி மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு அப்போதே கேள்வி எழுப்பியது.

ஆனால் மத்திய நிராகரிப்போடு இந்த திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடவில்லை. தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக 2026-2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என குறிப்பிட்டார். இத்திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த உதவும் என்று நிதியமைச்சர் கூறினார்.
தமிழ்நாடு அரசு கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான திருத்தப்பட்ட திட்ட ஆய்வு அறிக்கையை மீண்டும் தயாரித்து வருகிறது. விரைவில் இதனை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க இருக்கிறது. முன்னதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும் கோவை,மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் கைவிடப்படவில்லை மீண்டும் மத்திய அரசிடம் அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறுவோம் என தெரிவித்திருந்தது. நிதி அமைச்சரும் தற்போது இடைக்கால பட்ஜெட்டில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications