நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகுது.. கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் அக்.9-இல் திறப்பு..!!

கோவை நகரின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம், மக்களின் பயன்பாட்டுக்காக வரும் அக்.9-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

தென்னிந்தியாவின் மிக நீளமான பாலம் : கோவை அவிநாசி சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ.1,791.23 கோடி மதிப்பில் இந்தப் பிரம்மாண்ட திட்டம் தொடங்கப்பட்டது. இது 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பணி தொடங்கப்பட்டு, தற்போது முழுமையடைந்துள்ளது.

நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகுது.. கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் அக்.9-இல் திறப்பு..!!

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த மேம்பாலத்தின் சிறப்புகளைப் பற்றிக் கூறுகையில், இது 10.10 கிலோ மீட்டர் தூரம் கொண்டிருப்பதால், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலம் என்ற பெருமையைப் பெறுகிறது. இந்தப் பாலம் 4 வழித்தட உயர்மட்டப் பாலம் மற்றும் 6 வழித்தட விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நுழைவு மற்றும் வெளியேறும் தளங்கள் : இந்தப் புதிய மேம்பாலத்தில், இரு வழித்தடங்களிலும் வாகனங்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனியான தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வழித்தடத்தில், அண்ணாசிலை மற்றும் பீளமேடு ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், ஹோப் காலேஜ் மற்றும் விமான நிலையம் ஆகிய இடங்களில் இறங்குதளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கோல்டுவின்ஸ் - உப்பிலிபாளையம் வழித்தடத்தில், விமான நிலையம் மற்றும் ஹோப் காலேஜ் ஆகிய இடங்களில் ஏறுதளங்களும், பீளமேடு மற்றும் அண்ணாசிலை ஆகிய இடங்களில் இறங்குதளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (அண்ணாசிலை ஏறுதளம் மட்டும் நீதிமன்ற வழக்கு காரணமாக இன்னும் நிலுவையில் உள்ளது.)

ஹோப் காலேஜ் சந்திப்பில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது 52 மீட்டர் நீளமுள்ள 8 இரும்பு கார்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 725 டன் எடையுள்ள இந்த அமைப்புகள் சிறப்பு வாய்ந்தவை. கட்டுமானத்தில் அதிர்வு மற்றும் இரைச்சலைத் தவிர்க்கும் விதமாக 'சைனஸ் பிளேட்' போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பயண நேரம் குறைப்பு : இந்த பாலம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் கோவை மக்களின் நீண்டகாலப் பயணச் சிரமங்கள் தீரும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து வெறும் 10 நிமிடங்களாக குறையும். மேலும், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் அவிநாசி போன்ற பகுதிகளுக்கு செல்லும்போது கடக்க வேண்டிய 10 சிக்னல் சந்திப்புகளின் தேவையை குறைத்து, பயண நேரத்தை வெகுவாகச் சேமிக்கும்.

மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் :முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2021 மே மாதம் வரை வெறும் 5% மட்டுமே பணிகள் நடந்திருந்த இந்த மேம்பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளை திராவிட மாடல் அரசு விரைந்து முடித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கோவை மக்களின் பெருமைக்குரிய அறிவியல் கண்டுபிடிப்பாளரும், 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்படுபவருமான ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த உயர்மட்ட மேம்பாலத்திற்குச் சூட்டி மகிழ்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+