இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் 2ஆம் கட்ட நகரங்கள் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருக்கும் கோயம்புத்தூர் கடந்த 5 வருடத்தில் உற்பத்தி, டெக்ஸ்டைல், எம்எஸ்எம்ஈ பிரிவில் இருந்து ஐடி, டெக், ஸ்டார்ட்அப், ஜிசிசி என சேவை துறை பக்கம் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் எதிரொலியாக எப்போதும் இல்லாத வகையில் தற்போது கோவை மற்றும் திருப்பூர் மண்டலத்தில் ஆபீஸ் ஸ்பேஸ் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதிலும் முக்கியமாக வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் நேரடியாகக் கோயம்புத்தூரில் தனது டெலிவரி சென்டர்களையும், அலுவலகங்களையும் திறந்துள்ளது.

இதை பார்த்துக்கொண்டு இருந்த பல வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்களும் கோயம்புத்தூர்-க்கு படையெடுக்கக் கிளம்பிவிட்டது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் அதிகரித்து வரும் ஆபீஸ் ஸ்பேஸ் டிமாண்ட்-ஐ ஈடுகட்ட புதிய டெக் பார்க் அமைக்கப்பட உள்ளது.
கோவையை மையமாகக் கொண்ட KGISL நிறுவனம், சரவணம்பட்டி பகுதியில் "Wynfra Cybercity" என்ற பெயரில் ஐடி பார்க் கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது. இந்த திட்டம் சுமார் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளது.
இந்த பிரம்மாண்ட ஐடி பார்க் திட்டத்தில் இரண்டு 10 மாடி கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 7,200 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KGISL நிறுவனத்தின் இந்த புதிய ஐடி பார்க் திட்டம் கோவையின் ஐடி துறையின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 7,200 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், நகரின் பொருளாதாரம் மேம்படும், வர்த்தகம் என அனைத்தும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
எவ்வாறெனினும், பெரிய கட்டமைப்பு காரணமாகச் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். கழிவு நீர் மேலாண்மை, மின்சார சேமிப்பு மற்றும் மரங்களை நடுதல் போன்ற சுற்றுச்சூழல் நட்பு முறைகளை கடைப்பிடிப்பது முக்கியம். KGISL நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து காண வேண்டும்.


Click it and Unblock the Notifications