தமிழ்நாடு அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் பல மாவட்டங்களில் புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகளை, புதிய வேலைவாய்ப்புகள் என மொத்தமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை தாண்டி கோயம்புத்தூரில் ஐடி சேவை துறை முதல் உற்பத்தி வரையில் பல துறைகளில் முதலீடு குவிந்து வருகிறது.
தென்னிந்தியாவின் "மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும் கோவை, ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கடந்த 5 வருடத்தில் கண்டுள்ளது. கோவை பாரம்பரியமாகப் பருத்தி துணி தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் உற்பத்தித் துறைகள் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

இதனால் கோவையில் அலுவலக இடத்திற்கான டிமாண்ட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோயம்புத்தூர் கடந்த 6 வருடத்தில் சென்னை, பெங்களூர்க்கு அடுத்தபடியாக டெக் நிறுவனங்களுக்கு விருப்பமான இடமாக மாறி வருகிறது. இந்த அலுவலக ரியல் எஸ்டேட் டிமாண்ட்-ஐ சமாளிக்க கோவையிலும் புதிய ஐடி பார்க்-ஐ அமைப்பதாக பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Tanny Shelters நிறுவனம், சரவணம்பட்டி அருகே சத்தி ரோட்டில் புதிய ஐடி பார்க் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது கோவையில் நிலவும் அலுவலக இடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட முன்வந்துள்ளது வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளது. இந்த ஐடி பார்க் திட்டம் 12 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டிடங்களைக் கொண்டிருக்கும், மொத்த பரப்பளவு 3.5 லட்ச சதுர அடி இருக்கும்.

கோவை தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, தரமான அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. Tanny Shelters நிறுவனத்தின் இந்த புதிய ஐடி பார்க் திட்டம், இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து Tanny Shelters நிறுவனம் இதுவரை விரிவான தகவல்களை வெளியிடவில்லை என்றாலும், இந்த இரட்டைக் கட்டிடங்கள் அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐடி பார்க் திட்டம் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் நிறைந்த சரவணம்பட்டி பகுதியில் அமைந்திருப்பதால், நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் போக்குவரத்து சிக்கல் இருக்காது.

கோவையில் புதியதாக தொடங்கப்படும் இந்த ஐடி பார்க் நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சிக்கு உதவுக் கரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், கோவை நகரின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.
சமீபத்தில் சரவணம்பட்டி என்ற கோயம்புத்தூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள அதித்யா டெக் பார்க், சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகியிருக்கும் ஐடி பூங்கா-வின் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூரில் தற்போது இந்தியா லேண்ட், கேபிஆர், எஸ்விபி, எல்காட், எல் அண்ட் டி, wynfra cybercity, கேசிடி, ரத்தினம் டெக் சோன், டைடல் நியோ ராக்கிப்பாளயம் ஆகிய பல டெக் பார்க்குள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டத்தில் உள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications