சொத்து வரி வசூலில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை பின்தங்கியுள்ளது. சொத்து வரி என்பது சொத்து உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையாகும். இது சுற்றியுள்ள பகுதியில் உள்ள சாலைகள், வடிகால் முறைகள், தெரு விளக்குகள், பூங்காக்கள் போன்ற குடியுரிமை வசதிகளை நிலைநாட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சொத்து வரிகளை பொறுத்தவரை பொதுவாக அனைத்து வகையான ரியல் எஸ்டேட் கட்டிடங்களுக்கும் விதிக்கப்படுகிறது. மத்திய அரசின் சொத்துக்கள், காலி சொத்துக்கள் மற்றும் எந்த கட்டிடமும் இல்லாத காலி மனைகள் தவிர மற்ற அனைத்திற்கும் சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது.
சொத்தின் வகைகளை எப்படி பிரிப்பது..?: எந்தவொரு கட்டுமானமும் இல்லாமல் இருத்தல். வீடுகள், அலுவலகங்கள், கட்டிடங்கள் போன்ற நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள். பேருந்துகள், லாரி போன்ற நகர்த்தக்கூடிய சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகிய 4 வகைகளாக பிரிக்கப்படுகிறது. சொத்து விகிதங்களை பொறுத்தவரை அந்தந்த நகராட்சிகளால் தான் மதிப்பிடப்படுகிறது. இதுதான் சொத்து வரியையும் தீர்மானிக்கிறது. மேலும், இது ஆண்டுதோறும் அல்லது அரையாண்டு அல்லது ஏதேனும் பரிந்துரைக்கப்பட்ட தவணைக் காலத்தில் செலுத்தலாம்.

சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது..?: சொத்து வரி என்பது அதன் இருப்பிடத்தை வைத்து சந்தை மதிப்பின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது. இந்த முறை தற்போது மும்பையில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல், சொத்து வரியானது கணக்கீடு சொத்தின் பரப்பளவு விலையை அடிப்படையாக கொண்டதாகும். இது தற்போது டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பின்பற்றப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு சொத்தின் பெறப்பட்ட வாடகை மதிப்பைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்படுகிறது. இடம், வசதிகள், அளவு போன்றவற்றை அடிப்படையாக வைத்து சொத்து வரியை நகராட்சிகள் தீர்மானிக்கின்றன.
சம்பந்தப்பட்ட மாநகராட்சியின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் சொத்து வரியின் தொகையை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். ஆரம்ப வரி தொகையை கணக்கிட பகுதி, தரை போன்ற சொத்து விவரங்கள் தேவைப்படும்.
சொத்து வரி விலக்கு யார் யாருக்கு பொருந்தும்..?: மத்திய அரசின் கட்டிடங்கள், வளர்ச்சியடையாத நிலம், காலியாகவுள்ள சொத்துக்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. அதேசமயம், மூத்த குடிமக்கள், இருப்பிடம் மற்றும் வருமானத்தை பொறுத்து சொத்து வரியில் இருந்து விலக்கு கோரலாம்.
சொத்து வரி செலுத்துவது எப்படி..?: தங்களின் மாநகராட்சி அல்லது நகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்தலாம். சொத்து வரி என்பது வருடத்தில் 2 முறை செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் வரி செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 5% முதல் 20% வரை அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
கோவை முதலிடம்: இந்நிலையில், சொத்து வரி வசூலில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், 2024 - 25ஆம் நிதியாண்டில் ரூ.519.6 கோடி வரி வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இது ஆண்டுக்கு 12% வளர்ச்சி ஆகும். முந்தைய ஆண்டில் ரூ.463 கோடி வரி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தற்போது கோவைக்கு சிறப்பு சலுகைகளும் கிடைக்க இருக்கிறது. அதாவது, மாநில அரசின் ரூ.30 கோடி பரிசும், மத்திய அரசின் நகர்ப்புற மறுசீரமைப்பு ஊக்கத்தொகைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications