கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் மிகவும் முக்கியமான தொழில் மையமாக விளங்குவது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக விளங்குகிறது. கோயம்புத்தூர் 50 வருடங்களுக்கும் மேலாக உற்பத்தி, ஏற்றுமதி, சப்ளை செயின் என பல பிரிவுகளில் தொழில் முனைவோர், புதுமை மற்றும் பொறியியல் திறனுக்கு பெயர் பெற்றது.
இதோடு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கீட்டை கோயம்புத்தூர் கொண்டு உள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பின்பு கோயம்புத்தூர் மாவட்டம் பல துறையில் வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான முதலீட்டை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறை நிறுவனங்களுக்கு கோயம்புத்தூர் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது.

கோயும்புத்தூர் பொறுத்த வரையில் பொதுவாகவே டெக்ஸ்டைல், டெக்ஸ்டைல் இயந்திரம், மோட்டார் மற்றும் பம்பு, இன்ஜினியரிங் பிரிவில் வலுவான வர்த்தகத்தையும் முதலீட்டையும் கொண்டு இருந்தது. தற்போது பாதுகாப்பு துறை, ஐடி சேவை துறை, ஆட்டோமொபைல் துறை, எலக்ட்ரானிக்ஸ் துறை நிறுவனங்கள் முதலீடுகளை அள்ளி வீசி வருகிறது.
இந்த துறையாக இருந்தாலும் கோயம்புத்தூரில் வளர்ச்சி வாய்ப்பு அதிகம், அதற்கு முக்கியமான காரணம் கோயம்புத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டத்தில் அனைத்து துறை சார்ந்த MSME நிறுவனங்கள் ஏராளமாக உள்ளது. கோயம்புத்தூரில் டைடல் பார்க், தொழிற்துறை பூங்காக்கள் தாண்டி தற்போது பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
2,84,000 சதுரடி மற்றும் 1,54,000 சதுரடி என இரு Special Economic Zone (SEZ) குத்தகைக்கு விட தாயாராக உள்ளது. இந்த பகுதியில் ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கனரக உபகரணக் கருவிகள், மின் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள், சிப், எல்இடி, எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ரோபோடிக், ஜெனரேட்டர்கள், செமிகண்டக்டர்கள் என பல உற்பத்தி நிறுவனங்கள் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க வாய்ப்பு உள்ளது.
SE Forge Ltd., Suzlon Energy, L&T MDBA, ZF Wind Power ஆகியவை ஏற்கனவே இப்பகுதியில் இயங்கி வருகிறது. இதன் மூலம் கோயம்புத்தூரின் அடுத்தக்கட்ட வளர்ச்சி ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருந்து உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications