இன்றைய காலகட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெரும்பாலான இளைஞர்களும் பெண்களும் வேலைக்குச் செல்வதைக் காட்டிலும் சுய தொழில் தொடங்குவதில் பெரும் ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.
அப்படி 25 வயதுக்குட்பட்ட தொழில் முனைவோருக்கான சிறந்த 3 வணிக யோசனைகளை இங்கு பார்க்கலாம். கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தைரோகேர் வேலுமணி இந்த 3 யோசனைகளை இளம் தலைமுறையினருக்காக கூறியுள்ளார்.

ஒரு விவசாயி மகனாகப் பிறந்த வேலுமணி தனது அயராத உழைப்பு மற்றும் தொழில் திறன் காரணமாக இன்றைக்கு ரூ.7000 கோடிக்கு அதிபதியாக உள்ளார்.
நாட்டின் மிகச் சிறந்த உடல் நல பரிசோதனை செயினான தைரோ கேர் நிறுவனத்தை இவர்தான் தொடங்கினார். காலி அணிந்து கொள்ள செருப்புகூட வாங்க முடியாத நிலையில் இருந்த வேலுமணி இன்றைக்கு எல்லாரையும் தனது சாதனையால் மலைக்க வைத்துள்ளார். அவர் கூறியுள்ள வணிக யோசனைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
முதலாவது அட்வைஸில் இளம் தொழில்முனைவோர் தங்களது பெற்றோர் பணத்தை தங்களது தொழிலில் முதலீடு செய்து விரயம் செய்யக் கூடாது என்கிறார். அதேபோல் முதலீட்டாளர்களிடம் பெற்ற முதலீடுகளையும் தங்களின் தொழில் போட்டு விரையம் செய்யக் கூடாது என்கிறார்.
அத்துடன் தங்களுக்கென்று சுயமாக பணத்தை சேமித்து அதைத் தங்களது தொழிலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். பெற்றோர் பணத்தை வீணடித்தால் அது அவர்களுக்குச் செய்யப்பட்ட துரோகமாகக் கருதப்படும்.
முதலீட்டாளர்களின் பணத்தை வீணடித்தால் அது அவர்களது நம்பிக்கையை சிதைப்பதற்கு சமமாகும். சொந்தப் பணத்தை எடுத்து முதலீடு செய்தால் தான் அதை பன்மடங்கு பெருக்க வேண்டும் என்ற அக்கறையும் தொழிலில் ஈடுபாடும், உழைப்பும் இருக்கும் என்று அட்வைஸ்க்கான காரணத்தை வேலுமணி கூறுகிறார்.
இரண்டாவதாக இந்த உலகில் 2 வகையான மக்கள் தான் இருக்கின்றனர். முதலாவது வகையினர் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள். இரண்டாவது தரப்பினர் தங்களது முயற்சியில் முனைப்பு காட்டாதவர்கள். இதனால் அவர்கள் தோல்விகளை சந்திக்கின்றனர்.
மூன்றாவது அட்வைஸில் தொழில் நடத்துவது என்பது மாரத்தான் ஓட்டப்போட்டி போன்றதாகும். அதில் அதிவேக 100 மீட்டர் ஓட்டப்போட்டி போல் ஓடக்ககூடாது. அதாவது நீங்கள் செய்யும் தொழிலானது ஒரு தொலைநோக்கு செயலாகும்.
அதில் முந்திரிகொட்டை போல நிதானமின்றி யோசிக்காமல் கண்மூடித்தனமாக விரைவான முடிவுகளை எடுத்தால் அது உங்களை அதல பாதளத்துக்குக் கொண்டு தள்ளிவிட்டுவிடும். இதுதான் இந்த அட்வைஸுக்கு அர்த்தம்.
எனவே வாழ்க்கையில் நிதானமாகவும், புத்திசாலித்தனத்துடன் தான் செய்த முயற்சிகளால் ரூ.7000 கோடி சம்பாதித்த ஒரு சாதாரண மனிதராக இருந்த வேலுமணியின் வாக்கை இன்றைய இளைஞர்கள் சரியாகப் பின்பற்றினால் நிச்சயம் தங்கள் தொழிலில் பெரும் ஏற்றத்தை பெறுவது நிச்சயமாகும்.


Click it and Unblock the Notifications