தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி விற்பனையில் மாபெரும் ரீடைல் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது KPN Farm Fresh, இந்த பெயர் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கோவை பழமுதிர் நிலையம் கடை உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். கோவை பழமுதிர் நிலையம் பிராண்டின் தாய் நிறுவனம் தான் KPN Farm Fresh.
கோவை பழமுதிர் நிலையம் குறித்து இப்போது பேச முக்கியமான காரணம் உண்டு. இந்திய நிறுவனங்கள் புதிய முதலீடுகளை பெற முடியாமல் தவித்து வரும் வேளையில் இந்த நிறுவனம் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான WestBridge Capital-யிடம் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 550 முதல் 600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து அடுத்தக்கட்ட வளர்ச்சி பாதைக்கு மாபெரும் முதலீட்டை திரட்டியுள்ளது.

ஒரு குடும்ப நிர்வாகத்தில் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடியும், இதிலும் குறிப்பாக அடிமட்டத்தில் இருந்து வர்த்தகத்தை துவங்கினாலும் இது சாத்தியம் என்பதை காட்டியுள்ளது கோவை பழமுதிர் நிலையம் பிராண்டின் ஆர் நட்ராஜன் குடும்பம்.
தமிழ்நாட்டில் மட்டும் கொடிக்கட்டி பறந்து வரும் கோவை பழமுதிர் நிலையம் இந்த 600 கோடி ரூபாய் புதிய முதலீட்டின் மூலம் தென்னிந்தியாவின் பிற 4 மாநிலத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளது. தமிழ்நாட்டின் இந்த மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் துவக்க புள்ளி எங்கு தெரியுமா, சாலையோர தள்ளுவண்டி கடை

1965ல் கோவை பழமுதிர் நிலையத்தின் நிறுவனரான ஆர் நட்ராஜன் அவர்களும், அவருடைய மூத்த சகோதர் இருவரும் தந்தையின் மறைவின் காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, பசியை தீர்க்க சம்பாதிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இப்போது 300 ரூபாய் முதலீட்டில் தள்ளுவண்டியில் பழமுதிர் நிலையம் என்ற பெயரில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பழங்களை விற்பனை செய்ய துவங்கினர், கோயம்புத்தூரில் முதல் முறையாக பழங்களை டஜன் கணக்கில் விற்பதை மாற்றி கிலோ கணக்கில் விற்பனை செய்தனர்.
கிலோ கணக்கிலும், நியாயமான விலையிலும் பழங்களை விற்பனை செய்யப்பட்டதால் இது மக்கள் மத்தியில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து, இதை தொடர்ந்து பழ வியாபாரம் மந்தமடையும் போது ஜூஸ் விற்பனையில் இறங்கினர். கோவை பழமுதிர் நிலையத்தின் ஜூஸ்-ல் தண்ணீர் கலக்காமல் மக்களுக்கு கொடுப்பது தான் ஸ்பெஷல்.

இப்படி வர்த்தகம் படிப்படியாக வளர்ச்சி அடைந்த நிலையில், 2012ல் KPN Farm Fresh என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு இன்னும் வேகமாக பல பிரிவுகளில் பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருடத்திற்கு 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டு லாபகரமாக உள்ளது KPN Farm Fresh எனப்படும் கோவை பழமுதிர் நிலையம்.
KPN Farm Fresh நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகள் WestBridge Capital கைப்பற்றினாலும், 30 சதவீத பங்குகள் இன்னும் ஆர் நட்ராஜன் குடும்பத்திடம் தான் உள்ளது. இது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் நிர்வாகம், சிஇஓ பதவி அனைத்தும் தற்போதைய தலைவரான செந்தில் நட்ராஜனிடம் தான் இருக்க போகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications