கோயம்புத்தூரில் டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய ஐடி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் தற்போது சென்னை, பெங்களூர்-க்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெங்களூரில் ரியல் எஸ்டேட் செலவுகள் அதிகமாக இருப்பதாக நினைக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் முக்கிய மாற்றுத் தேர்வாக இருப்பது கோயம்புத்தூர்.
கோவை நகரத்தில் கிட்டத்தட்ட பெங்களூர்-க்கு இணையாக கிளைமேட், பல தரப்பு போக்குவரத்து வசதி, திறமையான ஊழியர்கள் பட்டாளம், பொழுதுபோக்கு அம்சங்கள், என ஒரு பெரு நகரத்தில் இருக்கும் அனைத்து சகல வசதிகள் இருப்பதும் இதற்கு முக்கியமான காரணம்.

கோயம்புத்தூரில் ஏற்கனவே பல வெளிநாட்டு நிறுவனங்களைத் தனது அலுவலகத்தைத் திறந்திருக்கும் வேளையில் தற்போது டெகாத்லான் வந்துள்ளது. டெகாத்லான் என்பது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல்வகை விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆடைகளை விற்பனை செய்யும் ஒரு சர்வதேச நிறுவனம் ஆகும். இதன் கிளைகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகின்றன.
டெகாத்லான் கோயம்புத்தூரில் அலுவலகம் திறந்தது மூலம், தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் டெகாத்லான் நிறுவனத்தின் விற்பனைக் கடைகள் சென்னையில் அண்ணா நகர், OMR மற்றும் கோயம்புத்தூர் மாநிலத்தின் பிற நகரங்களில் உள்ளன. இதனைத் தொடர்ந்து, தற்போது கோயம்புத்தூரிலேயே புதிய ஐடி அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஐடி அலுவலகம் கோவையின் முக்கிய பகுதியான பீலமேட்டில் கிராண்ட் பெர்டன் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு குறைந்தது 100 முதல் 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு, குறிப்பாகக் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஐடி துறை வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது உறுதி.
டெகாத்லான் நிறுவனம் ஐடி துறையில் எந்த மாதிரியான சேவைகளை வழங்குகிறது என்பது பற்றிய தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
கோயம்புத்தூரில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரையில் கோயம்புத்தூரில் அலுவலகத்தைத் திறந்து வருவதால் அலுவலக ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இந்த டிமாண்ட்-க்கு ஏற்ற சப்ளை இல்லாத காரணத்தால் கோயம்புத்தூர் மாநகரம் முழுவதிலும் பல இடத்தில் புதிய ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது.
சரவணம்பட்டி என்ற கோயம்புத்தூரின் முக்கிய பகுதியில் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அதித்யா டெக் பார்க்-ன் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த ஐடி பார்க் திறக்கப்பட உள்ளது. இங்கு நவீன அலுவலக வசதிகள் மற்றும் அதிநவீன கட்டமைப்புகளுடன் கூடிய அலுவலக இடங்களை உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளது. இதன் மூலம் முன்னணி ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் இந்த பூங்காவில் விரைவில் அலுவலகத்தைத் திறக்க உள்ளது.


Click it and Unblock the Notifications