உற்பத்தி மற்றும் டெக்ஸ்டைல் நகரமாக இருந்த கோயம்புத்தூர் தற்போது டெக் நகரமாக மாறி வரும் வேளையில், கோவை மாநகரில் அலுவலக இடத்திற்கான தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்நகரம் முழுவதும் ஐடி பார்க், டெக் பார்க் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள ஐடி பார்க் பல மாதங்களாகத் திறக்கப்படாமல் இருக்கும் வேளையில் தற்போது இதுகுறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ள ஐடி பார்க்-ன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த ஐடி பார்க்கின் திறப்பு விழா நடைபெறும் என்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து கோயம்புத்தூர் டெக் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கோயம்புத்தூரில் அதிகரித்து வரும் அலுவலக இடத்திற்கான டிமாண்ட் பூர்த்தி செய்யவும், 8 திசைகளிலும் புதிய டெக் பார்க் கட்டுமான பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முக்கியமான கட்டத்தில் தமிழ்நாடு அரசின் எல்காட் டெக் பார்க் திறக்கப்படுவது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
இந்த நிலையில் எல்காட் டெக் பார்கை வியாழக்கிழமை கட்டுமான பணிகளை அமைச்சர் பிடிஆர் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது இந்த ஐடி பார்க்கில் டெக் துறையில் இயங்கி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அலுவலகம் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார்.
கோயம்புத்தூர் எல்காட் டெக் பார்க் திட்டம் 2020 இல் அறிவிக்கப்பட்டது, கட்டுமானப் பணிகள் பல்வேறு காரணங்களால் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமானது. மூன்று லட்சம் சதுர அடி மொத்த பரப்பளவு மற்றும் ஆறு தளங்களில் சுமார் இரண்டு லட்சம் சதுர அடி அலுவலக இடத்துடன் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஐடி உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் ELCOT கோயம்புத்தூரில் புதிய மற்றும் அதிநவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் ஐடி டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. கோயம்புத்தூரில் 2வது IT பார்க் திறப்பதற்குத் தயாராக உள்ளது, இது சுமார் 2.66 லட்சம் சதுரடியில் சுமார் 114.16 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூரில் தற்போது 6-7 லட்டம் சதுரடி அலுவலக இடத்திற்கு தேவை உள்ளது, இதில் 2 லட்சம் சுதுரடி தேவையை இந்த எல்காட் டெக் பார்க் பூர்த்தி செய்து வருகிறது. பொதுவாக ஐடி சேவை துறையில், இரண்டு லட்சம் சதுர அடி இருந்தால், சுமார் 3,200 பேர் பணியாற்ற முடியும் என கூறும் அமைச்சர் பிடிஆர், சில முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசிடம் முழு கட்டிடத்தையும் குத்தகைக்கு எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்று லாக்டவுன்-க்கு பின்பு இந்தியா முழுவதும் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களுக்கு ஐடி நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அலுவலகத்தை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களுக்கு வரும் ஐடி நிறுவனங்கள் பட்டியலில் கோயம்புத்தூர் டாப் 5 இடத்தில் தொடர்ந்து உள்ளது. கோயம்புத்தூரை குட்டி பெங்களூர் என்றும் அழைக்க துவங்கியுள்ளனர் ஐடி துறையினர்.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications