கோயம்புத்தூர் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் அதிகப்படியான ஜிடிபி கொண்ட 2ஆம் தர நகரங்களில் டாப் 5 இடத்திற்குள் வரும் அளவுக்கு சுத்தி பல துறையில் முதலீடுகளையும், வர்த்தகத்தையும் ஈர்த்து வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளுக்காக சென்னை, பெங்களூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு செல்வோர் அதிகளவில் தற்போது கோயம்புத்தூர்-க்கு செல்ல துவங்கியுள்ளது.

இந்த நிலையில் கோயம்புத்தூர் முதலீட்டு சந்தையையும், இளைஞர்களையும் குளிர்விக்கும் வகையில் இன்று இரு முக்கிய முதலீடுகளை சர்வதேச நிறுவனங்கள் அறிவித்துள்ளது, இதன் மூலம் கோயம்புத்தூர் உற்பத்தி துறையும் அதன் வர்த்தகமும் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல உள்ளது.
சுவிஸ் நாட்டின் புதிய டெக்னாலஜி சென்டர் : தனிநபர் வருமானத்தில் உச்சத்தில் இருக்கும் சுவிஸ் நாட்டை சேர்ந்த Saurer என்னும் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக நம்ம கோயம்புத்தூரில் புதிய டெக்னாலஜி சென்டரை திறந்துள்ளது. ஜெர்மனி, சீனாவுக்கு அடுத்த பெரிய டெக்னாலஜி சென்டரை Saurer நிறுவனம் கோயம்புத்தூரில் துவங்கியுள்ளது.
இப்புதிய டெக்னாலஜி சென்டர் டெக்ஸ்டைல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் பணியாற்ற உள்ளது. தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் துறையில் ஆரம்பபுள்ளி கோவை, திருப்பூர், ஈரோடு, பவானி இன்னும் சில பகுதிகளில் அமைந்துள்ளதால் சுவிஸ் மத்திய மற்றும் முக்கிய வர்த்தக நகரமான கோயம்புத்தூரில் தனது புதிய டெக்னாலஜி சென்டரை அமைத்துள்ளது.

ஜெர்மனி நிறுவனத்தின் புதிய உற்பத்தி தளம் : Elgi Equipments லிமிடெட் மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த Sauer Compressors குரூப் கூட்டணியில் உருவான ELGI Sauer Compressors லிமிடெட் நிறுவனம் கோயம்புத்தூரில் கல்லப்பாளையத்தில் சுமார் 40 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தளத்தை இன்று துவங்கியுள்ளது. 40 கோடி ரூபாய் குறைவான அளவு முதலீடாக இருந்தாலும், இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் Compressor-கள் பல துறைக்கு மிகவும் முக்கியமானது.
கோயம்புத்தூரில் ELGI Sauer Compressors லிமிடெட் இன்று திறக்கப்பட்டு உள்ள புதிய உற்பத்தி தளம் சுமார் 50000 சதுரடியில் அமைந்துள்ளது. இந்த உற்பத்தி தளத்தில் தொழிற்சாலை, வர்த்தக கப்பல், போர் கப்பல்களில் அமைக்கப்படும் ஹைய் பிரஷர் கம்பிரசர்ஸ், pressure-reducing stations மற்றும் portable breathing air compressors-களை தயாரிக்கப்பட உள்ளது. இந்த கம்பிரசர்கள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

2008ஆம் ஆண்டு உருவான இந்த கூட்டணி நிறுவனமான ELGI Sauer Compressors லிமிடெட் இப்புதிய உற்பத்தி தளத்தில் இன்ஜினியரிங் சப்போர்ட் சென்டரையும் அமைக்க உள்ளது. இதன் மூலம் பல்வேறு இன்ஜினியரிங் உதவிகளும், புதிய ப்ராடெக்ட்-ஐ உருவாக்குவதும், அதை பரிசோதனையும் செய்ய முடியும்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications