சரக்கடிக்க காசு இல்லிங்க! அதான் ATM-ல் கை வச்சிட்டேன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயம்புத்தூர்: கொரோனா காலத்தில், யாரிடமும் போதிய அளவு காசு இல்லை. போதிய அளவுக்கு பணம் வந்தாலும், செலவுகள் ஏதாவது ஒரு பக்கம் அதிகரித்து விடுகின்றன.

 

இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்கவே முடியாமல், மக்கள் ஒரு பக்கம் வாழ்கையோடு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில், கோவையில் ஒரு நபர், மதுபானங்களை வாங்கி குடிக்க காசு இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக ஏடிஎம் இயந்திரத்தில் கை வைத்து இருக்கிறார்.

ஹாங்காங் விட்டு வெளியேறும் டிக்டாக்.. சீனா கோரிக்கைக்கு மறுப்பு..!

கோயம்புத்தூரில் சம்பவம்

கோயம்புத்தூரில் சம்பவம்

தொழில் நகரமான கோவையில், ஆர் எஸ் புரத்தைச் சேர்ந்த, 42 வயது நிரம்பிய விஜய குமார் என்பவர், முன்பு ஒரு தங்க பட்டறை (Gold Smithery) வைத்திருந்தார். தொழிலில் எதிர்பார்த்த படி போகவில்லை. தொழிலில் நஷ்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கடைசியில் வியாபாரம் மொத்தமும் காலியாகி நஷ்டம் தான் மிஞ்சியது.

குடி பழக்கம்

குடி பழக்கம்

கடை நஷ்டமான பின், விஜய குமார் மெல்ல குடி பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். அதோடு எந்த வேலைக்கும் போகாமல் இருந்து இருக்கிறார். கடந்த 03 ஜூலை 2020, வெள்ளிக்கிழமை இரவு, தன் மனைவி இடம் குடிக்க பணம் கேட்டு இருக்கிறார். விஜய குமாரின் மனைவி பணம் தர மறுத்து இருக்கிறார்.

ஏடிஎம் பிரவேசம்
 

ஏடிஎம் பிரவேசம்

எனவே, விஜய குமார், தன் மனைவியின் டெபிட் கார்டை திருடிக் கொண்டு வந்துவிட்டார். பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் பல முறை பணம் எடுக்க முயல்கிறார். அதன் பின் தான் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பது தெரிய வந்து இருக்கிறது. எனவே ஏடிஎம் இயந்திரத்துக்குள் இருக்கும் பண டிரேக்களை எடுக்க, முயற்சித்து இருக்கிறார்.

காவலர்களுக்கு தகவல்

காவலர்களுக்கு தகவல்

ஆனால் முடியவில்லை. விஜய் குமார் திறக்க முயற்சித்து, ஏடிஎம் ஸ்குரூக்களை எல்லாம் நீக்கி இருக்கிறார். அதையும் அப்படியே விட்டுச் சென்றுவிட்டார். அதன் பின் வந்து பார்த்தவர்கள் ஏதோ ஏடிஎம்-ல் பிரச்சனை இருப்பதைப் உணர்ந்து கொண்டு, காவலர்களுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

சிசிடிவி

சிசிடிவி

ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தி இருந்த சிசிடிவி வீடியோக்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அதன் பின் விஜய குமார் தேடிப் பிடித்து இருக்கிறார்கள். விசாரணையின் போது தான், மது குடிக்க, ஏடிஎம்-ல் இருந்து பணத்தை திருட முயற்சித்த்தாகச் சொல்லி இருக்கிறார். தற்போது விஜயகுமாரை judicial custody-ல் ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coimbatore Guy tried to rob money from ATM machine to buy liquor

Coimbatore RS Puram Guy tried to rob money from bank of india ATM machine to buy liquor.
Story first published: Tuesday, July 7, 2020, 19:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X