தமிழ்நாடு அனைத்து துறையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் பல மாவட்டங்களில் புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் என மொத்தமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதேபோல் இந்தியா முழுவதும் தற்போது 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி ஆலோசனை நிறுவனமான கோலியர்ஸ் இந்தியா (Colliers India) தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் நகரங்களைப் பட்டியலிட்டு உள்ளது.

கோலியர்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ள நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி திறனையும், முதலீட்டு வாய்ப்புகளையும் கொண்டுள்ளன என்பதை உறுதி செய்த பின்னர் இப்பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இதன் படி கோலியர்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ள நான்கு நகரங்களில் - கோவை, கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதி - எதிர்காலத்தில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
கோலியர்ஸ் இந்தியா என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் சேவைகள் மற்றும் முதலீட்டு மேலாண்மை நிறுவனமான கோலியர்ஸ் இண்டர்நேஷனலின் (Colliers International) இந்தியக் கிளை நிறுவனமாகும். இது வணிக பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், தொழில்துறை இடங்கள் மற்றும் பிற ரியல் எஸ்டேட் பிரிவுகளில் பரந்த அளவிலான சேவைகளை வழங்குகிறது.
ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி, மதிப்பீடு, ஆலோசனை, முதலீட்டு மேலாண்மை மற்றும் பரிவர்த்தனை மேலாண்மை போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றது கோலியர்ஸ் இந்தியா.
கோவை - வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் மையமாக அடையாளம் காணப்பட என்ன காரணம்?
தென்னிந்தியாவின் "மான்செஸ்டர்" என்று அழைக்கப்படும் கோவை, ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி திறனைக் கொண்டுள்ள ஒரு நகரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன:
தொழில் துறை வளர்ச்சி: கோவை பாரம்பரியமாகப் பருத்தி துணி தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால், சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பம் (IT), கல்வி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் துறைகள் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதன் காரணமாக, கோவையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதன் எதிரொலியாக நகரின் ரியல் எஸ்டேட் துறையை வலுப்படுத்துகிறது.
அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு: தமிழ்நாடு அரசு கோவை நகரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. சாலைகள், பாலங்கள், விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் கலவையாகத் தான் ரியல் எஸ்டேட் துறையில் கோயம்புத்தூர் முக்கிய நகரமாக தகுதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications