தென்னிந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையமாக கோவை உருவெடுத்துள்ளது. சுமார் 75,000 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த இடமாக கோவை மாறியுள்ளது. இது கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் மைசூர் போன்ற தெற்கின் முக்கிய பெருநகரம் அல்லாத நகரங்களை விட முன்னணி வகிக்கிறது. கோவையின் இந்த எழுச்சிக்கு கல்வி நிறுவனங்கள், பொறியியல் தளம், மலிவு உள்கட்டமைப்பு, தொடக்க நிறுவனங்களின் வளர்ந்து வரும் இருப்பு ஆகியவை காரணங்களாக பார்க்கப்படுகிறது.
அகமதாபாத், 90,000 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் முதல் இடத்திலும், 85,000 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஜெய்ப்பூர் 2-வது இடத்திலும், தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் 75,000 தொழில்நுட்ப வல்லுநர்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கோவையில் வலுவான பொறியியல் கல்வி அமைப்பு மற்றும் சிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேபோல், மலிவான உட்கட்டமைப்பு, மெட்ரோ நகரங்களை விட குறைந்த செலவில் ஏராளமான வசதிகள் இங்கு உள்ளன. GCCs (Global Capability Centers) மற்றும் ஸ்டார்ட்அப்புகளின் வளர்ச்சி தொழில்நுட்ப சூழலை வலுப்படுத்துகின்றன.

கோவை மாநகராட்சியின் வளர்ச்சி, தமிழ்நாட்டில் மெட்ரோ அல்லாத நகரங்கள் கூடவும், நாட்டின் மொத்த தொழில்நுட்ப வளர்ச்சியிலு முக்கிய பங்காற்றும் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை அழைக்கப்படும் நிலையில், இங்கு நாட்டின் சிறந்த தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன. மேலும், கோவை நகரின் பல்வேறு இடங்களில் பல வணிகப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஜவுளித் தொழில் மற்றும் மற்ற தொழில்களில் ஒரு வலுவான அடித்தளத்துடன், கோவை மாநகராட்சி சமீப ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப்களின் மையமாக வளர்ந்துள்ளது. மேலும் கோவை ஒரு பெரிய மற்றும் திறமையான தொழிலாளர் குழுவைக் கொண்டது. இது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. கோவையில் SEZ-கள் இருப்பது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், தொழில் வளர்ச்சிக்கு ஒரு சாதகமான சூழலையும் உருவாக்கியுள்ளது.
மாநில அரசின் முயற்சிகளுடன், கோவை ஒரு வளமான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. மேலும், பல புதிய நிறுவனங்கள் கோவையில் நிறுவப்பட உள்ளன. இங்குள்ள இந்தியா லேண்ட் டெக் பார்க் மற்றும் கே.டி.சி. தொழில்நுட்ப பூங்கா போன்ற முக்கிய IT பூங்காக்கள், இந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதேபோல், தமிழ்நாடு அரசு AI, IoT மற்றும் EV, பிளாக்செயின்போன்ற தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகிறது.தால், தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மென்பொருள் துறையில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டாவது இடத்தில் உள்ளது. தரமான தொழிலாளர் கிடைப்பது கோவையை ஒரு விருப்பமான வணிக இடமாக மாற்றும் ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
Non-Metro Tech நகரங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் : அஹமதாபாத் - 90,000, ஜெய்ப்பூர் - 85,000, கோவை - 75,000, இந்தோர் - 65,000, நாக்பூர், லக்னோ, புவனேஷ்வர் - 60,000, திருவனந்தபுரம் - 55,000, விசாகப்பட்டினம், கொல்கத்தா - 50,000, கொச்சி - 40,000, மைசூர் - 15,000
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications